Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்லி விவசாயிகள் போராட்டம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் சிதைக்கப்படும் ஆபத்து!

இந்திய விவசாய உற்பத்தியை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மூன்று சட்டங்களுக்கு எதிராக பல நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஐந்து கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் அரசின் கருத்துக்களை நிராகரித்துள்ள விவசாயிகள் தொடர்ந்து போராடுவோம் என அறிவித்துள்ளார்கள்.

இதில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 40 சங்கங்கள் பங்கேற்றாலும் சில சங்கங்கள் தன்னிச்சையாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் இருந்து கூட வேட்டவலம் மணிகண்டன் என்பவர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி சென்றுள்ளார். இவருக்கும் தமிழகத்தில் போராடும் விவசாய சங்கங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது போன்று வட மாநிலங்களிலும் பல சங்கங்கள் மத்திய அரசுடன் தன்னிசையாக பேச்சு நடத்துவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

ஐந்து கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உண்மையாக போராடும் விவசாயிகள் பிற சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை சிதைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.

மத்திய வேளாண் இணைச் செயலாளர் விவேக் அகர்வாலுக்கு புதன் கிழமை எழுதிய கடிதத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மத்திய அரசு முன் வைத்த விவசாயச் சட்டத்திருத்தம் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது. டிசம்பர் 9-ஆம் தேதியே இக்கோரிக்கையை நாங்கள் நிராகரித்து விட்டோம்” என்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளனர்.

இக்கடிதத்தில் விவசாயிகள் போராட்டத்தை சிதைக்க வேண்டாம். இந்த போராட்டத்தோடு தொடர்பில் இல்லாத விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில் பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த உத்தரபிரதேச மாநில பிரதிநிதிகள் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து விவசாயச் சட்டங்கள் தொடர்பாக பேசினார்கள். பின்னர் இந்த அமைப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தது.

பாரதிய கிசான் அமைப்பு என்ற விவசாய சங்கம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு கிளை அமைப்பாகும். இதை நிறுவியவர் தாத்தரேயா பாபரோ தெங்காடி என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆவார். இந்த அமைப்பு அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுக்கு ஆதரவாகவே விவசாயிகளிடம் பணி செய்யும். இப்போது இந்த அமைப்பு டெல்லி விவசாய போராட்டங்களை சீர்குலைக்க அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது.

Exit mobile version