Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை – பெரும்பாலான பெண்கள் குறித்துப் பேச்சில்லை

டெல்லியில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் நேற்று கவலை தெரிவித்தது.தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் குற்றங்கள் தொடர்பாக தேசிய சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர் நிபுன் சக்சேனா உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் கூறுகையில், தலைநகரில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி பலியான பிறகும் அத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கடந்த டிசம்பர் 16-ந் தேதி நடைபெற்ற பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதால் இந்தப் பிரச்னைகள் முடிந்து விட்டதாகக் கருதக்கூடாது. அதிகரிக்கும் குற்றங்கள், பாலியல் கொடுமைகள் போன்றவற்றால் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்புப் இல்லாத நிலை இருப்பதாக உணருகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்

இந்தியா முழுவதும் பாதுகாப்புப் படையினரும் அதிகாரவர்க்கமுமே பாலியல் வன்முறையில் அதிகமாக ஈடுபடும் போது டெல்லியில் மட்டும் பெண்களுக்குப் பாதுக்காப்பு இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்புக்கூறுவதன் பின்னணியில் பெரும்பாலான பாலியல் கிரிமினல்கள் பாதுகாக்கப்படுகின்றனரா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

Exit mobile version