டி.அருள் எழிலன்.
தமிழில்,
– பீர் முகமது.
என்னைப்
பற்றிய சிறிய அறிமுகத்துடன் இந்த வாக்குமூலத்தை ஆரம்பிக்க விரும்புகிறேன். என் அப்பா 40 வருடங்களாக அரசு ஊழியராக இருந்தார். அவர் தகவல் துறையில் பணியாற்றி அதன் இயக்குனராக ஓய்வு பெற்றார். அதன் பிறகு பிரதமர் அலுவலகத்தின் உதவி செயலராக பணியாற்றினார். பிரதமருக்கு உரைகள் எழுதித் தருபவராக இருந்தார். பல இனக்குழுக்கள் வாழும் கொழும்பு நகர சூழலில் நான் வளர்ந்தேன். பள்ளிக்கூட்த்திலும்கூட எனது நண்பர்கள் நாட்டின் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள். எனது பயிற்றுமொழி ஆங்கிலம். எனக்கு தமிழ் பேச முடிந்தாலும் சரளமாக வராது. உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்ததும் பேராதனை பல்கலைக்கழகத்தில் இணைந்து ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு படித்தேன். அங்கும் எனது நண்பர்கள் பல்வேறு இன்ங்களைச் சேர்ந்தவர்கள். பல்கலைக் கழகப் படிப்புக்கு பிறகு நான் 1987ல் சண்டே டைம்ஸ்-ல் சேர்ந்தேன். அதன் பிறகு சில தேசிய ஆங்கில நாளிதழ்களில் பணியாற்றினேன். 1989ல் மார்கா ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்த நான் தேசிய பிரச்சினையை எப்படி அமைதியாக தீர்ப்பது என்ற ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். மார்காவில் இருந்தபோதும் பிறகும் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அமைப்புக்கு (ஓபிஎஃப்எம்டி) உதவி செய்து வந்தேன்:
தெற்கில்
கிளர்ச்சியின் காரணமாக காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சர்வதேச பொதுமன்னிப்பு சபை, ஐ.நா போன்ற அமைப்புகளுக்கு அனுப்பி அந்தக் குடும்பங்களுக்கு உதவினேன். வாசுதேவ நாணயக்காராவும் மேதகு மஹிந்த ராஜபக்ஷவும் அதற்கு அரசியல் தலைமை ஏற்று ஆவணங்களை ஜெனீவாவிற்கு எடுத்து சென்றார்கள். மக்களின் பாதுகாப்பு பற்றி எனக்கு எப்போதுமே கவலை உண்டு. அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இளைஞர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். பயங்கரவாத விசாரணை இலாகாவிடம் இதையெல்லாம் சொன்னேன். ஆனால் அவர்கள் இதனை எழுதாமல் விட்டுவிட்டார்கள். முகம்மது ராஸிக் என்னிடம் எழுத சொன்னபோது கூட இதனை விட்டுவிட்டார். நான் தொழிலாளர்களுக்காக பேசியதால் பணியிலிருந்து நீக்கப்பட்டேன். தொழிலாளர் நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்து இழப்பீடு பெற்றேன். உயர் நீதிமன்றத்தில் மார்கா செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட்து. 1994 முதல் 1995 வரை தி மீடியம் என்ற அமைப்பு மூலமாக யுனிசெஃபின் திட்டம் ஒன்றில் பணியாற்றினேன். கிழக்குப்பகுதிக்குச் சென்று போரினாலும் எல்.டி.டி.இ, இ.பி.ஆர்.எல்.எஃப், ஜே.வி.பி, இந்திய அமைதிப்படை போன்றவர்களால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பற்றிய விவரணப்படம் ஒன்றை எடுத்தேன். இந்த விவரத்தையும் எனது வாக்குமூலத்திலிருந்து எடுத்துவிட்டார்கள்.
காணாமல் போனவர்களுக்கான ஆணையம் (1994-1996): நான் அவர்களுக்கு பல வழிகளில் உதவி செய்தேன். தகவல்கள் சேகரித்தேன்; அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தேன். குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள உதவி செய்தேன். இதெல்லாம் வாக்குமூலத்தில் விடுபட்டுள்ளன. தமிழ் அறிவு: எனக்கு தமிழ் சரளமாக வராது, நான் எப்போதுமே ஆங்கிலத்திலேயே எழுதி வந்திருக்கிறேன். என்னால் தமிழ் பேச முடியும்ஆனால் சரளமாக அல்ல. பள்ளிக்கூட நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக ராஸிக் சொன்னபோதுதான் தமிழில் எழுத நான் நிர்பந்திக்கப்பட்டேன். அதனை நான் சுயமாக எழுதவில்லை. நான் சொல்வது உண்மை. என் கண்பார்வை குறித்தும் பயங்கள் உள்ளன. விழித்திரை அகன்றிருந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன். அந்தப் பிரச்சினை மீண்டும் வந்தால் முழுமையாக பார்வை பறிபோகவும் வாய்ப்புண்டு. எனது வாக்குமூலத்தில் இடம்பெறும் தவறுகள் பற்றி எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சொன்னதை எழுதும்படி மிரட்டினார்கள். எனது வாக்குமூலத்தை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் நான் ஒத்துழைத்தால் சீக்கிரம் விடுதலை ஆக முடியும் என்றும் ராஸிக் சொன்னார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள்: இந்த சட்டத்தின் கீழ் என் மீது குற்றம் சாட்டுவது அநீதியானது; சட்ட விரோதமானது. அமைதிக்காலத்தில் இந்த சட்ட விதிகள் தளர்த்தப்பட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி வருவதும் போவதுமாக இருந்தார்கள்.
நான் ஒரு பத்திரிகையாளனாக சமாதானக் காலத்தில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் சென்று வந்தேன்
. எனது கட்டுரைகளை எழுதுவதற்காக அங்குள்ள வாழ்க்கை பற்றி நிறைய தகவல்கள் சேகரித்தேன். அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், மத தலைவர்கள், இடம்பெயர்ந்தோருக்காக பணி செய்வோர், என்.ஜி.ஓக்கள், புலித் தலைவர்கள் என பல தரப்பு மக்களை பேட்டி கண்டேன். என்னை போல பல பத்திரிகையாளர்களும் அதே சமயத்தில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் சென்று வந்ததை நான் அறிவேன். அந்த பகுதிகளில் வசித்த மக்களோடு நான் பல முறை தொலைபேசியிலும் பேசி தகவல் சேகரித்துள்ளேன். பாபா என்றொருவர் என்னிடம் எந்த பணமும் தரவில்லை. அவரிடமோ எல்.டி. டி. இ இடமோ நான் பணம் பெறவில்லை. நார்த் ஈஸ்டர்ன் மாத இதழ் வணிகரீதியாக நடத்தப்பட்டது. அது விஜித யபா, மக்கீன் புக் ஷாப் போன்ற கடைகளில் விற்கப்பட்டது. அதற்கு சந்தாதாரர்களும் இருந்தார்கள். சந்தா பணத்தை எந்த கணக்கு எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என்ற விபரம் ஜனவரி 2007 முதல் நார்த் ஈஸ்டர்ன் மாத இதழிலேயே அச்சிடப்பட்டது. அந்தப் பத்திரிகையை வாங்கிய எல்லோருக்குமே அந்த எண் தெரியும். நான் எப்போதுமே பயங்கரவாதத்திற்கு எதிரானவன். நான் பயங்கரவாதத்தை அதன் எல்லா வடிவத்திலும் எதிர்த்து வந்திருக்கிறேன். ஒருபோதும் வன்முறையை ஆதரித்ததில்லை. இனப்பிரச்சினைக்கு வன்முறையற்ற வழிகளில் தீர்வு காண்பதுதான் எப்போதும் என் தேடலாக இருந்தது. என் ஆய்வு, என் எழுத்துக்கள், என் பணி எல்லாமே அதை நோக்கியதாகத்தான் இருந்தது.
ஓபிஎஃப்எம்டி ஒரு சமயத்தில் எல்.
.டி. டி. இயினால் பிடிக்கப்பட்ட போலீசையும் போர்வீரர்களையும் பத்திரமாக விடுவிக்கும் பணிகளை செய்து வந்தது. அவர்கள் இதற்காக எல்.டி. டி. இயுடன் தொடர்பு ஏற்படுத்தி தேவைப்படும்போது வன்னிக்கும் சென்று வந்தார்கள். இந்த பயணங்களை ஒருங்கிணைப்பதற்காக நானும் எல்.டி. டி. இ தொடர்பாளர்களுடன் எனக்கு தெரிந்த தமிழில் பேசினேன். இந்த செய்தியையும் வாக்குமூலத்திலிருந்து நீக்கி விட்டார்கள். நான் வன்முறைபேர்வழி அல்ல. வன்முறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்காகவும் நான் எப்போதும் போராடி வந்திருக்கிறேன். குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ள இரு கட்டுரைகளையும் எழுதியதற்கு இனபேதத்தை தூண்டும் அல்லது வன்முறையை தூண்டும் உள்நோக்கம் ஏதும் கிடையாது. கட்டுரைகள் வெளியான பின் அப்படி எதுவும் நிகழவும் இல்லை. என்னிடம் சொல்வதற்கென்று இருப்பது இவ்வளவுதான்.
திசநாயகத்திற்கு சிறை கண்டனக் கூட்டம்.
இம் என்றால் வனவாசம்! ஏன் என்றால் சிறைவாசம்.
ஊடகவியலாளர்கள்
கலந்து கொள்ளும் கண்டனக் கூட்டமும், கருத்துப் பகிர்வும்.
கண்டன
உரை:ஏ.எஸ்.பன்னீர் செல்வம்,
தேவசகாயம், ஐ.ஏ.எஸ்
லெனின்,
பீர் முகமது,
வெங்கட்ரமணன்,
கவிதா முரளீதரன்,
மோகன், தலைவர், சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்.
ராஜேஷ் சுந்தரம், இணை ஆசிரியர், ஹெட்லைன்ஸ் டுடே.
டி.அருள் எழிலன்,
வினோஜ் குமார்.
மற்றும் பலர்: தெய்வநாயகம் பள்ளி, வெங்கட்நாரயணா சாலை, தி நகர், சென்னை. (திருப்பதி தேவஸ்தானம் அருகில்).
நாள்-
: செப் 12, சனிக்கிழமை.
நேரம்-
: காலை 10:30 மணி முதல் 1:30 மணி வரை