கடந்த சனி – 21.12.2013 – அன்று அந்த நிலையத்திலிருந்தவர்களை வெளியேற்றி அதனைக் கயகப்படுத்த போலிஸ் எடுத்த நடவடிக்கை ஜேர்மனியின் பெரும் போராட்டமாக மாற்றமடைந்தது. போலிசாருக்கு எதிராக எழாயிரம் ஆர்ப்பாட்டக் காரர்கள் ஒன்று கூடினர். ஆர்பாட்டக் காரர்கள் மீது போலிஸ் வன்முறையைப் பயன்படுத்தியது. கண்ணீர்ப் புகையைப் பிரயோகித்தது. 500 ஆர்பாட்டக் காரர்களும் 120 போலிசாரும் காயங்களுக்கு உள்ளானதாக உள்ளூர் போலிசாரின் உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் மோதல் நடந்த முறையை அவதானிக்கும் போது இது இன்னும் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.
ஹம்பேர்க் மானிலத்தில் போலிஸ் பேச்சாளர் மிக்ரோ ஸ்ரிபர் தாம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டோம் என ஊடகங்களிடம் தெரிவித்தார். ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் மக்கள் மத்தியில் தோன்றி வரும் புதிய விழிப்புணர்ச்சியையும் போராட்ட உணர்வையு கண்டு அரச அதிகாரங்கள் அச்சமடைகின்றன.
போலிசாரின் வன்முறையை ஆர்ப்பாட்டக் காரர்கள் கற்களை வீசியும் ஒன்றுதிரண்டு வழிமறிப்புச் செய்தும் எதிர்கொண்டனர்.இதன் காரணமாக போலிசாரும் காயமடைந்தனர்.