Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெ மரணம்- ஆறுமுகச்சாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை:-அப்பல்லோ

2016-ஆம் ஆண்டு உடல் நலம்குன்றிய ஜெயலலிதா 70 நாள் சிகிச்சைப்பின்னர் இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையைக் கிளப்பினர். தர்மயுத்தம் நடத்தினார்.

சசிகலாதான் ஜெயலலிதாவை விஷம் வைத்துக் கொன்றார் என்பது அதிமுகவினரில் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டு . பின்னர் எடப்பாடி பழனிசாமியும்  பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்த பின்னர் ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி விசாரிக்க ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தை அமைத்தனர். இந்த ஆணையம் சசிகலாதான் ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் என்ற முன் முடிவோடு விசாரணையை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில்,

“ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் பெயர் களங்கப்பட்டிருக்கிறது. அப்போதைய அதிமுக அரசு கூறித்தான் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் இருந்த கேமிராவை அகற்றினோம். காரணம் அது அவருடைய பிரைவசியை தொந்தரவு செய்யலாம் என்று அரசு சொன்னதால் கேமிராவை அகற்றினோம். ஆறுமுகச்சாமியின்  விசாரணை ஆணையத்தில் மருத்துவர்கள் இல்லை. விசாரணையும் அந்த நோக்கில் இல்லை. ஆனால்  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் வழங்கிய வாக்குமூலங்களே போதுமானவை.எனவே ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கயில்லை” என அப்பல்லோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version