சென்னை போயஸ் இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்கி கடந்த அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மரணமே சர்ச்சைக்குள்ளான நிலையில் அவர் வாழ்ந்த வீட்டை அதிமுக அரசு நாட்டுடமையாக்கியது. அந்த வீட்டிற்கு ஜெயலலிதாவின் வாரிசு தாரர்களான தீபா, தீபக் இருவரும் உரிமை கோரியிருந்த நிலையில் அதை கண்டு கொள்ளாத அதிமுக அரசு நாட்டுடமையாக்கி 2020 ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது.
அந்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியானது. ஜெயலலிதா மறைந்த பின்னர் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 11 தொலைக்காட்சி பெட்டிகள், 38 ஏசிகள், 10 பிரிட்ஜுகள், 11 டிவிடி பிளேயர்கள், 424 கிராம் எடையுள்ள வெள்ளி பூஜை பொருட்கள், 162 வெள்ளி பாத்திரங்கள்,556 பர்னிச்சர்கள்,சிறு டம்ளர்கள் சமையல்பாத்திரங்கள் 6514 பொருட்கள், இதர பர்னிச்சர்கள் 12,055 பொருட்கள்,டவல், பெட்ஷீட்,தலையணை உறைகள் பத்தாயிரத்து 438 பொருட்கள், எலக்ட்ரிக் பொருட்கள் 221, புத்தகங்கள் 8376,நினைவுப்பரிசுகள் 394, காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் 108 என மொத்தம் 32 ஆயிரத்து 721 பொருட்கள் அவரது வீட்டில் உள்ளன.
இந்த பொருட்களின் பட்டியலைப்பார்த்து மலைத்துப் போனார்கள். மேலும் அந்த இடத்தின் மதிப்பே பல கோடி ரூபாய் வரும் என்ற நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சட்ட ரீதியான வாரிசு தாரர்கள் ஆவார்கள். அவர்கள் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல. இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்கி கடந்த அதிமுக அரசு அளித்த தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது. என அந்த அறிவிப்பை ரத்து செய்தது. இன்னும் மூன்று வார காலத்திற்குள் ஜெயலலிதாவின் வீட்டை அவருடைய வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த உத்தரவு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.