சீமான் : ஈழத்தில் போர் நடத்தி தமிழர்களை கொன்றது காங்கிரஸ். 2ஜி அலைக்கற்றை வழக்கிற்காக ஒரு மாத காலம் பாராளுமன்றத்தை முடக்கியது பாரதீய ஜனதா. ஆனால் பக்கத்து நாட்டில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க முயற்சி எடுக்கவில்லை. அரசியலுக்காகத்தான் இவர்கள் எல்லாம் இலங்கை தமிழர் பிரச்சினையை பயன்படுத்துகிறார்கள்.
கேள்வி : அப்போ நீங்கள் ஈழத் தமிழர் பிரச்சனையைச் சுத்தமான வியாபாரத்துக்கா பயன்படுத்துகிறீர்கள்?.
சீமான் : வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடப்போவதில்லை. அதேபோல் யாரையும் ஆதரிக்கவும் இல்லை. வருகிற 2016-ம் ஆண்டு தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்.
கேள்வி : சட்டமன்றத் தேர்தலில் மட்டும் ஈழப் தமிழர் பிரச்சனையை அரசியலுக்காகப் பயன்படுத்தலாமோ?
சீமான் : கச்சத்தீவு என்பது இந்தியாவுடன் சேர்ந்த நிலப்பரப்புதான். கச்சத்தீவினை மீட்கவேண்டும்
கேள்வி : அப்போ கச்சத்தீவு தமிழீழத்துக்கு சொந்தமானது இல்லியா?
சீமான் : தமிழர் பிரதமர் என்னும்போது ஜெயலலிதா பிரதமராக வந்தால் வரவேற்பேன்.
கேள்வி : ஜெயலலிதா முதல்வராக இருந்தத போது தான் தமிழகத்தில் ஈழத் தமிழர் முகம்கள் மோசமடைந்தன. பேரறிவாளன் உட்பட மூவரை விடுதலை செய்யகூடாது என ஜெயலலிதா அரசு வழக்காடியது. தமிழ் நாட்டில் 90 களில் ஈழப் போராட்ட ஆதரவாளர்களை வேட்டையாடியது. பரமக்குடியில் ஆட்சிக்கு வந்த மறு நாளே தலித் தமிழர்களைக் கொன்றது. கூடங்குளத்தில் போலீசை அனுப்பி மக்களை அடக்கியது. அப்போ இலங்கை ஜனாதிபதியாக டக்ளஸ் வந்தால் தமிழர் என்ற ரீதியில் ஆதரிப்பீர்களா?
சீமான் : மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற நிலைதான் உருவாக வேண்டும்.
கேள்வி : தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை என்று அரசியல் பண்ணும் நீங்கள் ஏன் மத்தியை நம்ப வேண்டும்? தமிழகத்தில் தனி நாடு கேட்டு பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டம் நடத்தக்கூடாதா?