Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெயலலிதா கும்பலின் பணச் சூறையாடலும் சிறையும் : பயன்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்

jeyalalitha-posterதமிழகத்தைச் சூறையாடிய ஜெயலலிதா கும்பல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவின் இந்து பாசிஸ்டுக்கள் தமிழகத்தில் மற்றொரு பாசிஸ்ட் பலமடைவதை விரும்பாத நிலையில் ஜெயலலிதாவிற்கு வரையறுக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 18 வருடங்களுக்கு முற்பட்ட சொத்துக் கணக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தண்டனை மேலதிக 18 வருடங்களாகக் கொள்ளையடித்த சொத்துக்களைச் சட்டபூர்வமாக்கியுள்ளது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது காங்கிரஸ், கருணாநிதி சுப்பிரமணிய சுவாமியின் சதி என்ற வதந்தியைப் பரப்பி பாரதீய ஜனதா பாசிசக் கும்பல் வாக்குப் பொறுக்க முனைகிறது.

இந்து பாசிஸ்டுக்களுக்கு இடையிலான உள்முரண்பாட்டில் சிறை சென்ற ஜெயலலிதா என்ற சமூகவிரோதியைப் பயன்படுத்தி பாரதீய ஜனதா ஈழப் போரட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம், சோனியா காந்தி மற்றும் கருணாநிதி ஆகியோரின் கூட்டுச் சதியே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்களவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் என்ற தலைப்பிலான குறித்த சுவரொட்டியில் சுப்பிரமணிய சுவாமி, ராஜபக்ச, சோனியா மற்றும் கருணாநிதி ஆகியோர் திட்டமிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பழிவாங்கியுள்ளனர் எனவும், துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் அவலங்கள் தமிழ் இனவாதிகளுக்கு வெறும் முதலீடு மட்டுமே. செலவற்ற இந்த முதலீட்டால் சுவைகண்ட இனவாதிகளும் ஜெயலலிதா குழப்பிய தமிழ்க் குட்டைக்குள் மீன்பிடிக்கின்றனர்.

தமிழ்ப் பேசும் சிறுபான்மை சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அழிக்கப்படுகின்றது. இலங்கை ஏகபோக அரசுகளின் இராணுவ மையமாக மாற்றப்படுகின்றது. ஏழைகளின் நிலங்கள் பேரினவாதத்தின் பேராலும் அபிவிருத்தியின் பேராலும் சூறையாடப்படுகின்றது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் அவலம் தமிழ் நாட்டின் மில்லியன் கணக்கில் பணம்புரளும் அரசியல் வியாபாரத்திற்குப் பயன்படுகிறது. திருச்சியில் சிறப்பு முகாமில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அரசுகளால் தொடர்ச்சியாகச் சிறைவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ அகதிகளைப் பயன்படுத்தி ஜெயலலிதாவை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Exit mobile version