ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு மிக நெருக்கமான நபரான தேயிலை அபிவிருத்திச் சபையின் தலைவி ஜானகி குருப்பு, ஜனாதிபதியின் அதிகாரத்தை சபைக்குள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக சபையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேயிலை அபிவிருத்திச் சபையின் கட்டத்தைப் புனர் நிர்மாணம் செய்வதற்கும், மேம்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தை ஜானகிக்கு நெருக்கமான நிறுவனமொன்றுக்கு வழங்கி, பாரிய கொடுக்கல், வாங்கல் ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் பல லட்சம் ரூபா செலவில் மேம்படுத்தப்பட்ட அலுவலக அறைகளைக் கூட முற்றாக அகற்றிவிட்டு, அவற்றை சுமார் 100 லட்சம் ரூபா செலவில் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் முன்னாள் மனைவியான ஜானகி குருப்புவை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்து அவருக்கு பிரதி நிதியமைச்சுப் பதவியை வழங்கவும் ஜனாதிபதி தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.