Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சோனியாகாந்தி மு.க.ஸ்டாலினுக்கு மம்தாபானர்ஜி கடிதம்!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அஸ்ஸாம், மேற்குவங்கம், கேரளம், தமிழகம் என நான்கு மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நான்கு மாநில தேர்தலிலும் பாஜக வென்றே ஆக வேண்டிய நெருக்கடியில் உள்ளதால் இந்த மாநிலங்களில் உள்ள அத்தனைக் கட்சிகளையும் உடைத்து வருகிறது. இதில் மார்க்சிஸ்டுகள் மட்டுமே பாஜகவின் பாசிசத்திற்கு பலியாகாமல் கொள்கை பிடிப்போடு இருக்கிறார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் கட்சியை உடைத்து பல தலைவர்களை தன் பக்கம் இழுத்த பாஜகவால் மம்தாவை கையாள முடியவில்லை. அவர் பாஜக பாணியிலேயே  தேர்தலை கையாண்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழகம் வந்த ராகுல்காந்தி பாஜக பற்றியும் ஆர்.எஸ்.எஸ் பற்றியும் கடுமையாக பேசினார். அதற்கு முன்னர் பேசிய ஸ்டாலின் ராகுல்காந்திக்கு ஒரு கோரிக்கையை முன் வைத்தார். பாசிச பாஜகவை வீழ்த்த வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும். தமிழகத்தின் வெற்றிக்கு அதுவே காரணம். அதே போன்று இந்தியா முழுமைக்குமான வலிமையான கூட்டணி அமையுங்கள் என்றார்.

இப்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “ஜனநாயகத்தின் நான்காவது தூணை பாஜக சிதைத்து வருகிறது.  அவர்கள் இந்தியாவிற்கு  ஒற்றையாட்சி முறையை கொண்டு வர நினைக்கிறார்கள். மாநில உரிமைகளை காலில் போட்டு நசுக்கும் பாஜக அனைத்து மாநிலங்களையும் ஒரு மாநகராட்சி போல நினைக்கிறது. எனவே அவர்களை வீழ்த்த நாம் வலிமையான கூட்டணியை உருவாக்க  ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version