ஏற்கனவே, இந்த வழக்கை நடத்தி வந்த நீதிபதி மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்றதை அடுத்து புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்பெற்றுள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த 11-ந்தேதி தொடங்கியது.
ஏழு மாதங்களுக்கு பின், நீதிபதியின் கேள்விகளுக்கு, சசிகலா பதிலளித்தார்.நேற்றைய விசாரணையில், அரசு தரப்பில் சந்தேஷ் சவுட்டா, முதல்வர் ஜெயலலிதா வக்கீல் கந்தசாமி, சசிகலா வக்கீல் மணிசங்கர், சுதாகரன் வக்கீல் மூர்த்தி, இளவரசி வக்கீல் அசோகன் மற்றும் வக்கீல் பரணி குமார் உட்பட, பலர் ஆஜராகினர்.
அப்போது சசிகலா நேரில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்படாத ஆவணங்கள் மற்றும் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.
இதையடுத்து இவ்வழக்கில் விசாரணை நேற்று தொடங்கியது. அப்போது சசிகலா நேரில் ஆஜராகி, நீதிபதி பாலகிருஷ்ணா கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இன்று 2-வது நாளாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நிதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இன்று மதியம் வரை மொத்தம் 742 கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்துள்ளார். அவரது பதில்கள் அனைத்தும் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.