சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 14 பேருக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்
சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்ப குறித்து ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே விளக்களித்துள்ளார். தொலைக்காட்சியில் இதுகுறித்து பேசிய அவர் இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானது குறித்து தாம் அதிர்ச்சியடைந்ததாக கூறினார். பெங்களூரிலிருந்து விஜயவாடா சென்ற இளம்பெண் சுவாதி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளதாக கூறினார். குண்டுவெடிப்பு நிகர்ந்த இடத்தில் ரயில்வே உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். ரயில்வே போலீஸாருடன் இணைந்து மாநில போலீஸாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கவுகாத்தி – பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், 9-வது நடைமேடைக்கு வந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்தக் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை – சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று (புதன்கிழமை) பாகிஸ்தாப் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னையில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.