Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னை அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதிக்குச் சிலை!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த மு.கருணாநிதி அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே அண்ணா சாலையில் சிலை இருந்தது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இறந்த போது இறுதி ஊர்வலம் அண்ணா சாலை வழியே நடைபெற்றது. அப்போது இளைஞர் ஒருவர் கருணாநிதியின் சிலையை கடப்பாறையால் இடித்தார்.இந்நிகழ்வு அப்போது ஊடகங்களில் வெளியாக அதைவைத்து முரசொலியில் கருணாநிதி எழுதிய கவிதை ரொம்பவும் புகழ் பெற்ற கவிதையாக மாறியது. மெலும்  தனது சிலையை அப்புறப்படுத்தவும் கருணாநிதி உத்தரவிட்டார்.

பின்னர் அவருக்கு அண்ணாசாலையில் சிலை எதுவும் இல்லாமல் இருந்தது.கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தையும் காழ்ப்புணர்ச்சி காரணமாக மருத்துவமனையாக மாற்றியதோடு மீண்டும் அது சட்டமன்றம் ஆகி விட முடியாத படி பட இடங்களில் அதை இடித்து  அதன் வடிவத்தையே மாற்றினார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பெயர்கள் சென்னை முழுக்க பல முக்கிய இடங்களில் வைக்கப்பட்ட நிலையில் , பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஆட்சிக்கு  வந்த திமுக கலைஞருக்கு சென்னை மெரினாவில் நினைவில்லம் கட்டப்படும் என்று அறிவித்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் கலைனஞர் மு  கருணாநிதிக்கு ஏதோ ஒரு இடத்தில் சிலை வைக்கப்படும். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியே இந்த சிலை நிறுவப்படும்” என்று அறிவித்தார்.

ஏற்கனவே சிலை  இருந்த இடத்தை தவிர்த்து விட்டு புதிதாக ஒரு இடத்தில் சிலை நிறுவப்படும் என்று தெரிகிறது.

Exit mobile version