கொலம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வரும் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான கிளவுட் நைன் அலுவலகம் சென்னை தி.நகரில் உள்ளது.
கிரானைட் முறைகேடு வழக்கில் கைதாகாமல் இருக்க தலைமறைவாக இருந்து வரும் துரை தயாநிதியை தேடி மதுரை தனிப்படை போலிஸார் இன்று சென்னை வந்து தயாரிப்பு அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
சென்னை தியாகராயநகர் கிருஷ்ணா தெருவில் உள்ள தயாநிதிக்கு சொந்தமான கிளைவுட்9 பட தயாரிப்பு அலுவலகம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.