சென்னையை அடுத்த செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி மையம் செயல்படாமல் இருக்கிறது. தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதை மத்திய அரசு தாரைவார்க்கும் முடிவில் இருந்த நிலையில் தமிழக அரசு அதை எடுத்து நடத்தும் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தில் மீண்டும் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும். அதனால் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை இன்று பார்வையிட்ட தமிழக முதல்வர் அங்கு தடுப்பூசி தயாரிக்கும் இயந்திரங்கள் முழு திறனுடன் இருபப்தையும் பணியாட்கள் இருப்பதனையும் உறுதி செய்து கொண்டார்.பின்னர் இது தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குத்தகை ஒப்பந்த அடிப்படையில் அந்நிறுவனத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டும் எனவும், சுதந்திரமாக அதை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், தனியார் பங்களிப்போடு தமிழக அரசு அந்த நிறுவனத்தை நடத்துவதோடு இந்தியாவுக்கே முன்னோடியான தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமாக அதை மாற்றுவதாகவும் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.