பாஜக தலைவர்களுள் ஒருவரான கே.டி.ராகவன் பாஜக கட்சி உறுப்பினரான மதன் ரவிச்சந்திரன் என்பவரும் வெண்பா என்பவரும் இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கி அவமானப்பட்டார். பாஜக தலைவர்கள் 15 பேரின் விடியோ இருப்பதாகக் கூறிய மதன் ரவிச்சந்திரன் பின்னர் என்ன காரணத்தாலோ அமைதியாகி விட்டார்.
ஆனால் வெளியான விடியோ பாஜகவின் இமேஜை மொத்தமாக டேமேஜ் செய்து விட்டது. கட்சியின் பெண் உறுப்பினர்கள் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு கட்சிப் பணிகளில் இருந்து பெண்கள் விலகிச் சென்று விட்டார்கள். பக்தி, இந்து மதம் என்றுதான் பாஜக ஆட்களை கட்சிக்குள் இழுக்கும் பாஜகவினர் யாராவது இது மாதிரி சென்றால் கூட பெண்கள் குழந்தைகள் போவதில்லை என்பதால் உடனடியாக இதை மாற்ற நினைத்த பாஜக தலைவர் அண்ணாவலை விநாயகர் ஊர்வலத்தை கையில் எடுத்துள்ளார்.
பாஜக தலைவரான மோடி பிரதமராகவும் இருக்கிறார் அவர் தலைமையிலான அரசுதான் பொது மக்கள் கூட தடை விதித்துள்ளது. பண்டிகைக்காலங்களில் மக்கள் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாநிலங்களுக்கு கடிதமும் எழுதியுள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் விநாயகர் ஊரவலங்களுக்கு தடை உள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் விநாயகர் ஊர்வலங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என திமுக ஆட்சியை மிரட்டுகிறார் அண்ணாமலை. ராகவனின் சேட்டையால் டேமேஜான கட்சியின் இமெஜை விநாயகரை வைத்து சரி செய்ய நினைக்கிறார் அண்ணாமலை.
ஆனால் முருகனும் ,வேலும் கடந்த தேர்தலில் கை கொடுக்கவில்லை என்றாலும் நான்கு தொகுதிகளில் பாஜக வென்றதே பெரிய சாதனை என்று தேசிய அளவில் நினைக்கிறார்கள். அதே போன்று விநாயகர், முருகன், உள்ளிட்ட லோக்கல் தெய்வங்களை வைத்து அரசியல் செய்து எப்படியாவது அடுத்த தேர்தலில் 10 தொகுதிகளை பாஜக வெல்ல நினைக்கிறது.