Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுய நிர்ணைய உரிமைக்கு எதிரான பிரித்தானிய அரச பணத்தில் இயங்கும் மையத்தை வில்லியம் ஹக் திறந்துவைத்தார்

திறப்புவிழாவிற்குச் செல்லும் பிரித்தானிய வெளியுறவுச் செயலர்
திறப்புவிழாவிற்குச் செல்லும் பிரித்தானிய வெளியுறவுச் செயலர்

தன்னார்வ நிறுவனங்கள் -NGO- அல்லது அரச சாரா நிறுவனங்கள் என்றழைக்கப்படும் அரசை எதிர்ப்பவர்களைக் காட்டிக்கொடுக்கும் விச வேர்கள் உலகில் போராட்டங்களையும் புரட்சிகளையும் மனித உரிமைகளையும் அழிப்பதற்குப் பயன்படுகின்றன. எங்காவது எதிர்ப்பும் அரசுகளுக்கு எதிரான போராட்டங்களும் உருவாகுமானால் மக்களைப் போராடவேண்டாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தடுத்து அரசுகளுக்கு உதவிபுரியும் இந்த நிறுவனங்கள் இலங்கையில் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதற்கு கடந்த பத்தாண்டுகளாக முடுக்கிவிடப்படுள்ளன.
இலங்கையில் ஒரு தனிமனிதன் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறைந்தது 5 சமூக அபிவிருத்தி அமைப்புக்களால் ஆளுமை செய்யப்படுகிறான் என்று ஆசிய வங்கி அறிக்கை கூறுகின்றது.

இனப்படுகொலையும், இனச்சுத்திகரிப்பு நடைபெறும் நாட்டில் நல்லிணக்கம், சம உரிமை, மிள்கட்டமைப்பு என்ற பெயரில் உருவாகும் இத் தன்னார்வ நிறுவனங்கள் பெரும் பணச் செலவில் இயக்கப்படுகின்றன. அண்மையில் பொது நலவாய மாநாடில் கலந்துகொள்ளச் சென்றிருந்தத பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலர் வில்லியம் ஹக் ஒன்றிணைந்த இலங்கை -Sri Lanka Unites-  என்ற தன்னார்வ நிறுவனத்தால் நடத்தப்படும் நல்லிணக்க மையம் ஒன்றைத் திறந்துவைத்துள்ளார். இலங்கை அரசுடன் இணைந்து உலகம் முழுவத் இயங்கும் இத்தன்னார்வ நிறுவனத்தின் நல்லிணக்க மையத்திற்கான பண உதவியயையும் பிரித்தானிய அரசே வழங்குகிறது.

நூறு பாடசாலைகளைச் சேர்ந்த 15,000 மாணவர்களை இலங்கை முழுவதும் உறுப்பினர்களாக்கொண்ட இத் தன்னார்வ நிறுவனத்தின் ஒரே குறிக்கோள் இலங்கையில் இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது மட்டுமே. வடக்கிலும் கிழக்கிலும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலோ, இனச்சுத்திகரிப்பு நடைபெற்றாலோ, பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலோ, முஸ்லீம் மக்கள் மிருகங்கள் போல் தாக்கப்பட்டாலோ இவர்கள் துயரடையப் போவதில்லை.

இத் தன்னார்வ நிறுவனம் பிரித்தானியா, அவுஸ்திரேலிய, நியுசிலாந்து, கனடா, அமரிக்கா போன்ற நாடுகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.

‘மோதலின் பின்னர் சமரசம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அனுபவத்தை நாங்கள் வட அயர்லாந்தில் நிலை நாட்டியிருக்கிறோம். நல்லிணக்கம் ஒரு செயல்முறை அல்ல ஒரு நிகழ்ச்சிப் போக்கு. இது ஒரு இரவுக்குள் நடந்துவிடுவதில்லை. இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே பாலமிடுவதற்கு இளைஞர்கள் சக்திமிக்க பங்கை வகிக்க வேண்டும்.’
என்று நிலையத்தைத் திறந்துவைத்த வில்லியம் ஹக் தனது உரையில் கூறியுள்ளார்.

இலங்கை அரச கல்வித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அனுமதியோடு இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் மாணவர்களைத் திரட்டிவரும் இந்த நிறுவனம், அவுஸ்திரேலிய அரசு, பிரித்தானிய அரசு, அமரிக்க அரசு ஆகியவற்றிடமிருந்து பண உதவிகளைப் பெற்றுக்கொள்கிறது.

மாத்தறையில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹக்கினால் திறந்துவைக்கப்பட்ட நல்லிணக்க மையம் உள் நாட்டு யுத்ததால் பிளவடைந்த இனங்களை இணைத்து வைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றது.

இலங்கை அரசின் பிரித்தானியாவிற்கான முன்னை நாள் தூதர் மங்கள முனசிங்க, ஜெயந்த தனபால போன்ற அதியுயர் பதவிகளை வகித்தவர்களை அறங்காவல் குழுவில் அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு சுய நிர்ணய உரிமைக்கு எதிரானது.

இலங்கையில் பிரித்தானிய அரசு போன்ற ஏகபோக அரசுகளதும் தன்னார்வ நிறுவனங்களது முதல் பணி சுய நிர்ணய உரிமைக்கான குரலை நசுக்குவதாகும்.
இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாததிற்கு முன்பதாக உள்ளக விசாரணை நடத்தப்படாவிட்டால் சர்வதேச விசாரணையைக் கோருவோம் என்று டேவிட் கமரன் கூறுவதும், டேவிட் கமரன் புலி ஆதரவாளர் என்று இனக்கொலையாளி கோத்தாபய ராஜபக்ச கூறுவதும், காதில் பூச்சுற்றும் நாடகம்.

பிரித்தானியா போன்ற ஏகபோக அரசுகளுக்கும், தன்னார்வ நிறுவனங்களுக்கும் எதிரான உலகம் முழுவது வாழ்கின்ற மக்கள் கூட்டங்களே சுய நிர்ண உரிமைக்கான போராட்டத்தின் நண்பர்கள். டேவிட் கமரன் யாழ்பாணத்தில் கைகுலுக்கிய அவலங்களோடு வாழும் அத்தனை மக்களும் டேவிட் கமரனின் கோப்ரட் நாடகத்தில் அவரின் நண்பர்கள் அல்ல. பகடைக்காய்கள்.
மேலும்:

https://www.gov.uk/government/news/foreign-secretary-opens-uk-funded-reconciliation-centre

http://srilankaunites.org/index.php

http://srilankaunites.org/AboutusWhoweare.php

https://www.facebook.com/williamjhague

தொடர்பான பதிவுகள்:

தன்னார்வ நிறுவனங்கள்(NGO) – எரியும் உலகம்!
NGO களின் பொற்காலம்
Exit mobile version