தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தப்படுகிறது. இதன் காரணமாக தமிழக எல்லை பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக அரசின் பிடிவாதத்தால் தமிழகம்-கர்நாடக எல்லைப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி-கர்நாடக எல்லையிலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஊட்டியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளள.
இன்று காலை முதல் பஸ்கள் எதுவும் புறப்பட்டு செல்லவில்லை. இதே போல் கர்நாடகாவில் இருந்தும் அரசு பஸ்கள் மற்றும் எந்த வாகனமும் நீலகிரிக்கு வரவில்லை. நீலகிரி-கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.