சில ‘சுப்பர் சிங்கர்’ புகழ் குழந்தைகளோடு தமிழக சினிமா வக்கிரங்களை போரின் கோரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புலம் பெயர்ந்த கூறுகள் கண்டுகளித்தன.
நூற்றுக்கணக்கான புலம் பெயர் இளம் கலைஞர்கள், ஈழத்திலிருந்தே தோன்றியுள்ள கலைஞர்கள் போன்றோரைத் தமிழ் நாட்டின் சினிமாக் குப்பைகள் கொன்று புதைக்கின்றன.
தமிழைக் கூடப் பேசமறுக்கும் தென்னிந்தியத் தொலைக்காட்சிக் குப்பைகள் ‘பீலிங்குடன்” புலம்பெயர் தேசத்து மக்களின் வீடுகளில் வந்து உட்கார்ந்து கொள்கின்றன. இவற்றிற்கு அடிமையாகிவரும் ஒரு பெரும் கூட்டம் தமது குழந்தைகளுக்கு இதுவே எமது கலாச்சாரம் என்று தொலைக்காட்சிகளை நோக்கிச் சுட்டுவிரலை நிட்டுகிறது.
ஜீ.ரி.வி இன் தேசிய பிழைப்பு நிகழ்ச்சிக்கு முன்பதாக மானாட மயிலாட என்ற தமிழகத்து தொலைக்காட்சிக் கூத்தாட்டத்தால் லண்டன் அழுக்காக்கப்பட்டது. இவையெல்லாம் மக்களின் போராட்ட உணர்வை அழிப்பதற்கான திட்டமிட்ட ஆகிரமிப்புக்களே.
தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் புரட்சிகரக் கலை நிகழ்ச்சிகளை ஏறெடுத்துப் பார்ப்பதற்குக் கூட ‘தேசிய உணர்வு’ இவர்களை விட்டுவைப்பதில்லையோ?