இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா சில்லறை வணிகத்தில் அன்னியக் கொள்ளைக்கு ப.ஜ.க தலைவர்கள் ஆதரவளிப்பது குறித்துக் கேள்வியெழுப்பியுள்ளார்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், சிறு வர்த்தக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தனது எதிர்ப்ப்பைக் காட்ட கூட்டணியில் இருந்தே விலகியது.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாக பாஜக கூறி வருகிறது. இந்நிலையில் அக்கட்சியின் 2 மூத்த தலைவர்கள் அத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஏற்கக் கூடியதா இல்லையா என்பதை பாஜக தலைவர்களும், அதன் செய்தித் தொடர்பாளரும் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தை ஆதரித்து அருண் ஷோரி மற்றும் பி.சி. கந்தூரி பேசியது கட்சி மேலிடத்திற்கு தெரிந்து தெரிவிக்கப்பட்ட கருத்தா? அவர்கள் இருவரும் பாஜகவில் தான் இருக்கிறார்களா அல்லது அவர்கள் வேறு எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை பாஜக தலைமை தெரிவிக்க வேண்டும் என்றார்.
சில்லரை வணிகத்தில் அன்னியத் தலையீடு என்பது இந்தியாவில் எஞ்சியிருக்கும் இறுதிப் பண மூலதனத்தையும் கொள்ளையிடும் முயற்சியாகும். இதற்கு எதிராக வெற்றிகரமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்க முடியாதென்றால் அது மறைமுக ஆதரவாகவே கருதப்படும்.