Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறையில் வழக்கறிஞர்களின் நிலை?

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மதுரை, சென்னை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கருணாநிதி அரசின் ஒடுக்குமுறையையும் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஒடுக்குமுறையையும் சந்திக்கும் தோழர்கள் சிறையிலும் தங்களின் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்கள். இந்நிலையில் இந்த வழக்கறிஞர்களின் நிலை குறித்து எந்தத் தகவல்களையும் யாரும் தெரிந்து கொள்ள இயலவில்லை. மேலும் சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களில் இரண்டு பெண் வழக்கறிஞர்கள் மட்டும் தங்களின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக ஆளும் கட்சி ஜாலரா ஊடகங்கள் போலீஸ் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்தன. ஆனால் இது குறித்து எந்தத் தகவல்களையும் பெற முடியாத நிலையில் வழக்கறிஞர்களின் உறவினகளைக் கூட பொலீசார் அவர்களை சந்திக்க அனுமதி மறுத்து வருகின்றனர். மோசமடைந்து நிலைமையை எவ்விதத்தில் கருத்தில் கொள்ளாத மக்கள் விரோத கருணாநிதி அரசைக் கண்டித்து இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் புறக்கணிப்புப் போராட்டம் நடந்து வருவது ஒரு புறமிருந்தாலும் ஈழத் தமிழர்களில் சில புலி ஆதரவுச் சக்திகள் கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கி செம்மொழி மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் நிலையில் ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போரடியெ அதே வழக்கறிஞர்கள்தான் இப்போது தமிழை நீதிமன்ற மொழியாக்கவும் கோரி போராடுகிறார்கள். இந்த உண்மையை நன்றியுள்ள எந்த ஈழத் தமிழானாவது நினைத்துப் பார்க்க வேண்டும்.

Exit mobile version