தமிழர்களின் நாட்டுப்புறக் கதைகளுக்கும் சிங்கள நாட்டுப் புறக்கதைகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றது இதற்கு காரணம் நாடடுப்புறக்கதைகள் அனைத்துமே உழைக்கும் வர்க்கத்தின் இலக்கியங்களாக காணப்படுவதனாலாகும். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் மனித குலமானது சூழல் வேறாக இருந்தப் போதும் இனம் மதம் நிறம் வர்க்கம் ஆகிய அனைத்திலும் வேறுப்பட்டு இருந்த போதும் மனித குலத்தின் அங்கம் வகிக்கும் அனைத்து மானுடனதும் அடிப்படை தேவைகள் உணர்வுகள் என்பன அனேகமாக சமாந்தரமானவையாகும்.
வரலற்றை வெற்றிக்கொள்வதற்காக மனித குலம் முகம் கொடுத்த வெற்றிகள் வீரம் கண்டு பிடிப்புகள் என்பவற்றுடன் மனிதனது தோல்விகள் கபடத்தனங்கள் வில்லத்தனங்கள் போன்ற ஆனுபவங்களை இன்றும் எமக்குகாண்பிக்கும் காலத்தின் கண்ணாடியாக இருப்பவை நாட்டுப்புற இலக்கயங்களே. இதிலும் மிகவும் தத்ரூபமாக எமக்கு நமது முன்னோர்களின் வாழ்வியலை எடுத்தியம்பும் ஊடகமாக நாட்டார் கதைகளே காணப்படுகின்றன.
ஆண்ட பரம்பரையினர்களான அரசர்களினதும் ஜமீன்தார்களினதும் சுகபோகங்களை அனுபவித்த சமயத்தலைவர்கள் நிலப்பரபுக்கள் பெரிகங்காணிமார்கள் போன்றோரின் வீரப்பிரதாபங்கள் இவர்களுக்கு எதிராக புரட்சி செய்தவர்கள் தொடர்பான தகவல்களை புத்தகங்கள் காவியங்கள் புராணங்கள் இதிகாசங்கள் என்பவற்றின் மூலம் வாசிக்கக் கூடியதாக இருந்த போதும் சாதாரண பொதுமக்களின் அனுபவங்கள் எங்கும் பதிவு செய்யப்பட்டு இல்லை என்றே கூற வேண்டும்
இவர்கள் தொடர்பான விடயங்களை பரம்பரை பரம்பரையாக தெறிந்துக்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட வாய் மொழி கதைகள் உலகின் உயர்ந்த இலக்கிங்கள் என்ற மதிப்பைப் பெறுகின்றன.மனித குலத்தின் மொழிப்பயன்பாட்டுக்காலம் முதல் இன்று வரை மனித வரலாற்றிற்கு சான்று பகரும் உன்னத ஊடகமாக வாய்மொழி இலக்கியங்கள் காணப்படுகின்றதென்றால் மிகையாகாது.
பஞ்சத்தந்திரக் கதைகள் விக்கிரமாதித்தன் கதைகள் போன்ற கதைகள் அரச குமாரர்களும் அரண்மனை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் குருக்குலக்கல்வியைய் தொடர்வதற்கு விருப்பப்படாத நேரங்களில்; அவர்களுக்கு மிக எளிமையாக கல்வி புகட்ட ஏற்பட்ட வாய்மொழி கல்வி முறையே இவை என்று நம்முன்னோர்கள் கூறியுள்ளனர் இதிலும் கல்வியே கற்காத ஒருவன் பஞ்சத்தந்திர கதைகள் அனைத்தையும் கற்றான் என்றால் அவன் பூரணமானவன் என்ற மதிப்பைப் பெறுவான் என்றுக் கூறப்படுகின்றது
சிங்கள நாட்டுப்புறக்கதைகளை நோக்கும்போது வயலும் வயல் சார்ந்த கதாப்பாத்திரங்களுமே அதிகமாக காணப்படுகின்றன மலையக நாட்டுப்புற இலக்கியங்களை நோக்கும் போது தேயிலையும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் அம்சங்களையும் முனைப்பாகக் கொண்டு படைக்கப்பட்ட பாடல்களையே அநேகமாக பதிவற்கு கொண்டுவந்துள்ளனர். சிங்கள இலக்கியத்தில் நாட்டுப்புறக்கதைகளை கெமி கதா கிராமத்துக்கதைகள் என்று கூறுவார்கள் சிங்கள கிராமத்து கதைகளிலே வரும்மிக பிரதானப்பாத்திரங்களாக கமரால என்னும் விவசாய தொழிலாளியும் கமஆமினே என்னும் விவசாயியின் மனைவியுமே காணப்படுவார்கள் இந்த வகையில் மிகப்பிரசித்திப்பெற்ற மாதன முத்தாக் கதாப்பாத்திரமும் அவரின் சீடர்களின் முட்டால் தனமான செயற்பாடுகள் தொடர்பான கதைகளை நாம் வாசித்து அனுபவித்துள்ளோம்.
முன்னைய காலங்களில் கிராமத்தலைவராக இருந்த சிங்கள நாட்டாமை ஒருவரே இந்த மாதன முத்தா இவரது கொடுமைகளைத்தாங்க முடியாத பொது மக்கள் இவரை பலி வாங்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட இந்த கதைகளினூடாக மக்கள் தங்களின் எதிர்ப்புணர்வை காட்டியுள்ளார்கள் என்பதே இந்த கதைகள் இன்றும் நிலைத்திருப்பதற்கு காரணமாக இருக்கின்றது.
ஆண்டபரம்பரையினரின் ஆதிக்க செயற்பாட்டினை எதிர்க்கவும் விமர்சிக்கவும் சாதாரண மனிதர்கள் இலக்கியங்களை ஆயுதமாக கொண்டள்ளனர் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த மாதன முத்தா கதாப்பாத்திமாகும்.
இவை அல்லாமல் அரசர்களுக்கு அறிவூட்டும் கதைகளும் காணப்படுகின்றன இந்த வரிசையில் மிகவும் பிரபலமான கதைகளாக கெகில்லே ரஜ்ஜிருவோ என்னும் கெகில்லே அரசனது கதைகள் காணப்படுகின்றன.இவற்றின் பிரதான கதாப்பாத்திரம் அந்தரே என்னும் அரசவை விகடகவியாவான் இதற்கு ஒத்த கதாப்பாத்திரமாக தம்ழ் மொழியில் தெனாலி இராமன் கதைகளும் காணப்படுகின்றன
ஒரு நாள் கெகில்லே அரசன் தனது அமைச்சர்களைப்பார்த்த முன்னால் இருக்கும் பைரவ மலையைய் காட்டி இந்த மலைஎன்ன செய்கின்றது என்று கேட்டான் அதற்கு அரசனுக்கு என்றும் முகஸ்துதி செய்பவர்களும் பொய்புகழ்பாடபவர்களும் சின்னச்சின்ன சலுகைகலுக்காய் இல்லாதவற்றை இருப்பதாக கூறும் அரசவை அமைச்சர்கள் அரசனைப்பார்த்து அரசே உங்களின் நீதியான ஆணைகளைக்கேட்டு அந்த மலை நடுங்குகின்றது என்று கூறினார்கள் இதைக்கேட்ட அரசன் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தரேயை நோக்கி அந்தரே என்ன ஒருசத்தத்தையும் காணவில்லை என்று கேட்க எனக்கென்றால் மலை நடுங்குவது போன்று தெறியவில்லை மலை கடுமையான யோசனையில் இருப்பது போலவே தெரிகின்றது என்றான் அதற்க அரசன் ஏன் யோசித்துக் கொண்டு இருக்கின்றது என்று கேடக அதற்கு பதிலாக அந்தரே மலை யோசிக்கின்றது இவ்வாறு முகஸ்துதி பாடும் பொய்யர்களிடம் எமது அரசரும் ஏமாந்து போகின்றாரே என்று கூறினான் இந்தக் கதை பல்லாயிரம் உண்மைகளையும் பலக்கோடி உவமைகளையும் எமக்கு எடுத்தியம்புகின்றது.
உலக நாட்டார் கதைகளை நோக்கும் போது அரசரை எதிர்த்து கதை செய்ய முடியாத பொது மக்கள் உவமான உவமேய கதைகளாக மிருகங்களை பாத்திரங்களாக பயன் படுத்தி கதை சொன்ன விதமானது மனித சிந்தனையின் ஆளுமையினை காட்டிநிற்கின்றது
சிங்கத்தை முட்டாளாக்கி சித்தரிக்கும் கதைகள் அரசனை கடுமையாக விமர்சிப்பவையாகவும் காணப்படுகின்றன.
சிங்கள நாட்டுப்புறக் கதைகளைப் பற்றிய அனுபவங்களைப் பகிரும் போது மற்றய மொழிகளினாலான நாட்டார் இலக்கயங்களில் காணப்புடுவது போன்ற உழைப்பும் உழைப்பு சார் அனுபவங்களும் வேதனைகளும் ஏமாற்றங்களும் கூறப்படுவதாகவே காணப் படுகின்றது.இவற்றில்காணப்படும் நகைச்சுவை உணர்வுகள் நமது மூதாதையர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு காரணமாய் இருந்திருக்கும் எனலாம்.
சிங்கள நாட்டுப்புறக்கதைகளில் இலங்கை திருநாட்டின் ஊர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்ட வரலாறுகளும் சிறந்த வாய்மொழிக்கதைகளாகவே காணப்படுகின்றன.
கொத்மலை என்னும்பிரசித்திப்பெற்ற ஊர் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தின் அழகிய கிராமம் ஆகும் இந்த கிராமப்பகுதிக்கு பெயர்வந்த கதை மிக சுவாரஸ்யமானதாகும் மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்த கமரால ஒருவர் மலை ஒன்றிற்கு அண்மையில் சென்றுக்கொண்டிருந்தப் பொழுது பாரியசத்தத்துடனான ஒளிப்பிழம்பு ஒன்றைக்கண்டான் அந்த இடத்திலே தங்கக்கலசம் ஒன்று(ரன்கொத) தென்பட்டதாகவும் அந்தத் தங்கக்கலசம் அந்த மலை உச்சியிலேலே புதைந்து போனதாகவும் கூறியதாக மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது இவ்வாறான அதிஸ்டம் ஒன்று கண்ணிற்கு எட்டியது கைக்கெட்டாமல் போனது எங்களின் துரதிஸ்டம் என்று இன்றும் கொத்மலைபிரதேச மக்கள் அங்கலாய்ப்பதை காணலாம்.
இதற்கமய கொத கீழிறங்கிய மலை கொத்மல என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகின்றது தமிழில் பாவிக்கப்படும் மலை என்னும் சொல்லை சிங்கள மொழியிலும் பிரயோகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது மேலும் மின்னல் தாக்கம் அல்லது எரிக்கற்களின் உதிர்வு காரணமான பின்னணிகள் இந்த நிகழ்விற்கு காரணமாயிருக்களாம் என்று நம்பப் படுகின்றது.
இது போன்ற நுர்ற்றுக்கணக்கான நாட்டார் கதைகள் சிங்கள மொழியில் காணப்படுகின்றது இவையனைத்துமே உழைக்கும் வர்க்கத்தினரை மகிழ்வித்த இலக்கியங்களாகும் இந்த இலக்கியங்கள் வாழ வேண்டும் பாதுகாக்கப்பட வேணடும் மதிக்கப்பட வேண்டும் கார்ல்மார்க்ஸ் நாட்டுப்புற இலக்கிய படைப்பாளிகளை கிரேக்கத்தின் படைவீரர்கள் என்று புகழ்கின்றார் ஏனெனில் இவர்கள் பாட்டாளி வர்க்க படைப்பாளிகள்.உலக வரலாறு இன்று வாழ்வதற்கு காரணம் இந்த வாய் மொழி இலக்கியங்கள் என்றால் மிகையாகாது.எமது நாட்டின் இன ஐக்கியத்திற்கு மக்கள் இலக்கிய வாதிகளின் படைப்புகள் என்றும் சான்று பகரும்.உழைக்கும்மக்கள் வாழும் வரை வாய் மொழி இலக்கியங்கள் உயிர்ப்புடன் வாழ்ந்து உழகை;கும் மக்களின் வாழ்வியளை உலகறியச் செய்யம்.
உசாத்துணை நுர்ல்கள்:
2.கேமி ரச கதா 10 மிஸ்ஸக சூரியபண்டார
பொத் பிரகாசகயோ.
3.ஜன கதா 01 தேசிய கல்வி நிறுவகம்
4.சிரி லங்காவே ஜனகதா
5. Motif Index of the Folktale Stith Thompson இணையம்