Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேகா கைது : உன்னிப்பாக அவதானிக்கும் அமரிக்கா

நாங்கள் இலங்கை நிலவரம் குறித்து மிக  உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று அமரிக்க அரச அலுவலகப் பேச்சாளர் பிலிப் கிரவ்ளி ஏ.எப்.பி செய்திகளுக்குத் தெரிவித்தார். சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். இன்றைய அரசின் நடவடிக்கைகள் எதிர்கால ஜனநாயக அமைப்புமுறையைப் பாதிக்கும் என பிலிப் மேலும் தெரிவித்தார். வன்னியில் ஐம்பதாயிரம் தமிழர்கள் கொலைசெய்யப்பட்ட காலப்பகுதியில் இலங்கை நிலைமைகள நெருக்கமாக அவதானித்து வருவதாகவும் இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் அமரிக்க ராஜாங்கப் பேச்சாளர் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத்தை அழிக்க்பட்டதாக அமரிக்க ஜனாதிபதி ஒபாம ராஜபக்சவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தது தெரிந்ததே.

சரத் பொன்சேகாவின் கைது குறித்து கவலையடைந்திருப்பதாக பிலிப் கிரவ்ளி மேலும் தெரிவித்தார். இந்திய அரசோ அதன் பேச்சாளர்களோ இது குறித்த கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version