நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் ஒரு விழாவில் தனது மகன் பற்றிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்டார் அதில் வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்ற போது சமஸ்கிருத மந்திரம் ஓதிய போது தன் மகன் மாவீரன் பிரபாகரன் அழத்துவங்கி விட்டதாகவும், பின்னர் தமிழ் ஓதுவார் வந்து தமிழில் ஓதத்துவங்கிய பின்னர் அழுகையை நிறுத்தியதாகவும், தமிழ் மொழிக்கு அப்படி ஒரு வல்லமை உண்டு என்றும் பேசினார்.
இந்நிலையில், காளையார் கோவில் அருகில் உள்ள முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவிலில் குல தெய்வ வழிபாடும், அதனையொட்டி மகன் மாவீரன் பிரபாகரனுக்கு காதணி விழாவும் நடந்தது. இந்த விழாவை நாம் தமிழர் கட்சியினர் ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
108 ஆடுகளை பலி கொடுத்து விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றியுள்ள கிராம மக்களும் திரண்டு வந்திருந்தனர். ஆனால், காதணி விழாவின் போது சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க மகனுக்கு காதணி விழாவை நடத்தி முடித்துள்ளார் சீமான்.
சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க காதணி விழா நடந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.