Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் விலகினார்

தமிழக சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமார் ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பொறுப்பை தற்காலிகமாக துணை சபாநாயகர் கவனிப்பார் என சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார்.
.கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று 3வது முறையாக தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக சட்டசபையின் சபாநாயகராக கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் டி.ஜெயக்குமார் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஜூன் மாதத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர், அதைத் தொடர்ந்து 2012ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற கவர்னர் உரைக்கான முதல் கூட்டத்தொடர், பின்னர் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகியவற்றில் சபாநாயகராக இருந்து பணியாற்றினார்.
முன்னதாக ஜெயக்குமாரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் பதவி விலகியிருக்கிறார். ஜெயலலிதாவின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் அடிமைகள் சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலே அரசியல் வியாபாரத்தில் அடியிலிருந்தே தூக்கி ஏறிந்துவிடும் சர்வாதிகாரி ஜெயலலிதா.

Exit mobile version