Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொரோனா தொற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா!

தேர்தலுக்காக பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம்

சொத்துக்குவிப்பு  வழக்கில் தண்டனைக்குள்ளாகி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வருகிற 27-ஆம் தேதி அவர் விடுதலையாவார் என்று கூறப்பட்ட நிலையில்  புதன் கிழமை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழு உடற் பரிசோதனை செய்ய மருத்துவமனை அனுமதித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சி.டி ஸ்கேன் செய்ய முடிவெடுத்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அவரோடு சசிகலாவின் மருத்துவர்கள் இருவர் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில், அவரைக் காண பெங்களூரு மருத்துவமனையில் அவரது உறவினர்களும் தொண்டர்களும் திரண்டனர். ஸ்கேன் செய்ய அழைத்துச்  சென்றார்கள் அங்கு அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடந்தது. அதில் அவருக்கு நிமோனியா தொற்று இருப்பது உறுதியானது. நிமோனியா பாதிப்பு  நுரையீரலை பாதித்திருப்பதால் அது கொரோனா தொற்றாகவும் உருவாகி உள்ளது.

ரத்த அழுத்தம், சர்க்கரை குறைபாட்டுடன் நிமோனியா தொற்றும் இருப்பதால் அவரை பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார்கள். ஜனவரி 27- ஆம்தேதி விடுதலை ஆக இருந்த சசிகலாவின் உடல் நிலை தொடர்பாக வெளிவரும் செய்திகள் தமிழக அரசியலை சூடாக்கி வருகிறது.

 

 

 

 

 

Exit mobile version