Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சசிகலாவை ஆதரிப்பவர்கள் யார்?

சசிகலாவை ஆதரிப்பவர்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். முதலாமவர்கள் சாதி ரீதியிலானவர்கள். அது சசிகலா – தினகரன் தரப்பு மறைமுகமாகவும், நேரடியாகவும்‌ ஒரு கடைசிப் போக்கிடமாக ஊக்குவித்து வந்தது. தா. பாண்டியனிலிருந்து எஸ்.பி லட்சுமணன் வரை வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் தாங்கள் இருக்குமிடம் சார்ந்து உணரிகளை நுணுக்கி அனுப்புகிறார்கள். இது சசிகலா தரப்பின் பலகீனத்தை வெளிப்படுத்துகிறது என்பதை உணராமல் அவருக்கு ஆதரவு பெருகி வழிவதாக ஒரு கூட்டம் நம்பித் தொலைக்கிறது.
இரண்டாவது தரப்பு மன்னார்குடி கும்பலால் சீராட்டப்பட்டவர்கள். அதில் எல்லா சாதிகளில் இருக்கும் முக்கியஸ்தர்களும் குறைந்த வீதத்தில் அடங்குவர். நாஞ்சில் சம்பத் மாதிரி எதிர்பாரா இடங்களிலிருந்து வருகின்ற திடீர் ஆதரவு ஒரு உதாரணம். இதெல்லாம் போக சில பெரியார் அமைப்புகள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் ஆதரிக்கின்றன. பாஜக ஆட்சி சசிகலாவை சிறைக்கு அனுப்பியது எனவும், சசிகலா பார்ப்பனர் அல்லாதவர் போன்ற காரணங்களே போதும் என்ற எண்ணத்தில் இந்த ஆதரவு நிலையை எடுக்கிறார்கள்.
ஆனால் சட்டையைப் பிடித்து உலுக்கினாலும் பாஜகவுக்கு எதிராக மூச்சு விடத் துப்பில்லாமல் ஒரு தேர்ந்த கிரிமினலின் நயநுட்பத்துடன் பாஜகவுடனான பந்தத்துவத்தை பராமரிக்கிறது சசிகலா – டி.டி.வி தரப்பு. பாஜகவை விமர்சிக்க வேண்டாமென்று நாஞ்சில் சம்பத்தை தினகரன் அமமுக தொடக்க நாள் பொதுக்கூட்டத்தின் போது கேட்டுக் கொண்டுள்ளார். ஒன்றுமில்லாமலே சசிகலா – தினகரனை கொம்பு சீவி விட முயற்சிப்பவர்கள் சசிகலாவோ, தினகரனோ ஏதாவது சொல்லி இருந்தால் எப்படி குதித்திருப்பார்கள்? அப்படி ஒரு நிலைமை தோன்றினால் பெரியார் கொள்கைகளுக்கு அதை விடவும் அவமானகரம் எதுவுமிருக்க முடியுமா?
Exit mobile version