Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோவை மாணவிக்கு பள்ளியில் நடந்த பாலியல் கொடுமை-ஆசிரியர் கைது!

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி வீட்டில் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.அவர்  எழுதிய வைத்த கடிதத்தில்,”’யாரையும் சும்மாவிடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா, எலிசா சாருவோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அப்பகுதியில் உள்ள சின்மயா வித்யாலாவில் படித்து வந்தார். மாணவியை மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியை அவர் பள்ளி நேரத்திற்கு முரணாக வரவழைத்து பாலியல் வன்முறை செய்ததாக மாணவி தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் முன்கூட்டியே பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தும் அவர்கள் இதை மறைத்தும் உள்ளார்கள்.

மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி வேறு வழியின்றி அந்த பள்ளியில் இருந்து விலகி அரசுப்பள்ளியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். ஆனாலும் அவரால் அந்த கொடுமையில் இருந்து மீளமுடியவில்லை. காரணம் –பாலியல் தொல்லையில் ஈடுபட்டவர் அதே பள்ளியில் பணியில் தொடர பள்ளி நிர்வாகமோ இந்த மாணவியை குற்றவாளியாக்கி பள்ளியை விட்டு அனுப்பியிருக்கிறது. தவறே செய்யாத மாணவி இந்த துன்பத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இப்போது இந்த வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தினர் மீதும் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை தேவை என்று மாணவியின் உடலை வாங்க மறுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் உறவினர்கள். மற்றும் முற்போக்கு அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

Exit mobile version