Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோவையில் வானதி சீனிவாசனின் தோல்வியை உறுதி செய்த யோகி ஆதித்யநாத்!

தமிழகத்தில் பாஜகவினர் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெல்லார் என்ற பொதுவான எதிர்பார்ப்பு இருந்தது. அவருக்காக பாஜக தலைவர்கள் பலரும் வந்து பிரச்சாரமும் செய்தனர். பிரதமர் மோடி, அமித்ஷா உட்பட வட இந்திய பிரபலங்கள் பலரும் வந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இரு நாட்களுக்கு முன்னார் வந்தார்.

அவர்  கோவை ராஜவீதி தேர்முட்டி திடலில் பேசுவதாக இருந்தது. ஆனால் அந்த திடலுக்கு வாகனங்களில் வந்த பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களும் வரும் வழியில் உள்ள கடைகளை அடைக்கக் கோரி வன்முறையில் ஈடுபட்டனர். சில கடைகள் மீது கல்வீசினார்கள். சில வியாபாரிகளையும் தாக்கினார்கள்.

பெரிய வணிக நிறுவனங்களின் வாயிலில் நின்று கோஷம் எழுப்பி கடைகளை மூடச் செய்தனர். இது மிகப்பெரிய பதட்டமாக மாற அடுத்த சில மணி நேரங்களில் கோவை முழுக்க கடைகள் அடைக்கப்பட்டது.

மக்கள் வீடுகளுக்குள் முடங்கினார்கள். இது பாஜகவுக்கு அதிர்ப்தியை உருவாக்கியிருக்கிறது.

இதை பயன்படுத்திக் கொண்ட கமல் பாஜகவினரின் தாக்குதலுக்கு உள்ளான கடையில் சென்று ஷூ ஒன்றை வாங்கினார். வியாபாரிகளுடன் பேசினார்.

மறு நாள் அன்று மாலையே திமுக தலைவர் ஸ்டாலின் கோவைக்குச் சென்று தாக்குதல் நடந்த வீதிகள் வழியே நடந்தார். இது அந்த மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், கோவை தெற்கு தொகுதியில் திமுக போட்டியிட வில்லை. அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரா மயூரா ஜெயக்குமார் போட்டியிருகிறார். கமலும் போட்டியிடுகிறார், பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இந்த நிகழ்வுக்குப் பின்னர் வானதி சீனிவாசனின் வெற்றி கேள்விக்குள்ளாகியுள்ளது. கமல் அல்லது மயூரா ஜெயக்குமாரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார்கள்.

Exit mobile version