இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் என்ற இரு தடுப்பூசிகளை மாநில அரசுகள் மக்களுக்குச் செலுத்தி வருகிறது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியை புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டியூட்டிற்கு தயாரிக்கும் உரிமையை இந்திய அரசு வழங்கியிருந்தது.இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டியூட் இந்திய அரசுக்கு 250 ரூபாய்க்கு தடுப்பூசியை விற்பனை செய்து வந்தது. தயாரிக்கும் மருந்துகளில் 50% தடுப்பூசியை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்பது அரசின் நிபந்தனை. அதாவது இந்த தடுப்பூசியை தயாரிக்க அரசு நிதி கொடுக்கும்,. அவர்கள் தடுப்பூசியை தயாரித்து அரசிடமே விற்பனையும் செய்வார்கள்.இப்படி பல நிறுவனங்களுக்கும் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை இந்திய அரசு வழங்கியுள்ள நிலையில் இரண்டாம் நிலை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நேற்று பேசிய பிரதமர் மோடி தடுப்பூசி தயாரிக்கும் உரிமையை பல தனியார் நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாகவும் அதற்காக 4,500 கோடி ரூபாய் அரசு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் என்றும். அதற்கான நிபந்தனையாக 50% தடுப்பூசியை அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கிறோம் என்றும் பேசினார். நேற்று அவர் பேசிய நிலையில் சீரம் இன்ஸ்டியூட் இன்று தடுப்பூசிகளின் விலையை இரு மடங்கிற்கு மேல் விலையை ஏற்றியுள்ளது.இதுவரை 250 ரூபாய்க்கு அரசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தடுப்பூசி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும். தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்டும் என்றும் சீரம் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அறிவித்துள்ள சீரம் இன்ஸ்டியூட் பூனம் வல்லா அமெரிக்காவில் 1,500 ரூபாய்க்கும், சீனாவில் 750 ரூபாய்க்கும் தடுப்பூசி விற்பனை செய்யப்படுகிறது என்று விலை உயர்வுக்கான காரணத்தையும் குறிப்பிட்ட்யுள்ளது.கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட வேண்டும். ஒரு டோஸ் 600 ரூபாய் என்றால் இரண்டிற்கும் 1200 ரூபாய் கொடுத்துதான் இந்தியார்கள் இந்த தடுப்பூசியை போட வேண்டும்.ன் 400 ரூபாய் என்றால் 800 ரூபாய் கொடுத்துதான் அரசு இதை வாங்க வேண்டும். இந்தியாவில் கொரோனாவை முன் வைத்து தடுப்பூசி வணிக சூதாட்டம் துவங்கி விட்டது.