Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோவாக்சின் தடுப்பூசி போடலாமா மக்களிடம் உள்ள சந்தேகங்கள்?

இன்று (16-01-20210 அன்று முதல் 166 மையங்களில் கோரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 160 மையங்களில் பிரிட்டன் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியும்  6 மையங்களில் கோவாக்ஸின் தடுப்பூசியும் போடப்படும் என அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் தொடர்பாக பல கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில் முதற் கட்டமாக 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.

முதல் கட்டமாக 5,36,500  டோஸ் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை தமிழகத்தில் உள்ள 9 தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அளிக்கப்படுகிறது.  இந்த தடுப்பூசி மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப்பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டும் போடப்படுகிறது. இதில் கோவாக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை இன்னும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.  இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “ கோவேக்சின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட சோதனையை  நிறைவு செய்யவில்லை. அந்த தடுப்பூசி தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் எதற்கும் அரசு பதில்  சொல்லவில்லை. அந்த தடுப்பூசி தொடர்பாக மருத்துவர்களும்,  அறிஞர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லாத நிலையில்,. முன் களப்பணியாளர்களுக்கு தமிழகத்தில் இந்த தடுப்பூசியை போடுவதை தவிர்க்க வேண்டும்” என்றக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில அரசு கோவாக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு தடுப்பூசி போடும் பணிகளை துவங்கியுள்ளது.

Exit mobile version