
பிரித்தானிய தமிழர் பேரவை புலம் பெயர் தமிழர்களை பிரித்தானிய பிரதான பாரளுமன்றக் கட்சிகளுடன் இணைப்பதே வேலைத்திட்டம் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது. நேற்றைய தினம் (15.06.2011) பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பு தனது ஒன்று கூடலைப் பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டடத்தில் நடத்தியிருந்தது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதாவது ஒரு வகையில் பங்களித்த இக்கட்சிகள் புலம் பெயர் தமிழர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. மறு புறத்தில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள அரசியல் தலைமகள் இக்கட்சிகளுக்குப் பயன் பட்டுப் போவதைப் பெருமையாக எண்ணுகின்றன.
இந்த நிலையில் கொலைகளம் என அழைக்கப்பட்ட இலங்கையிலிருந்து பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியோரை பிரித்தானிய அரசு இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் ஒரு தொகுதியினரே. ஏனையோர் விரைவில் அனுப்பிவைக்கப்படுவார்கள். மிகவும் கோரமான முறையில் விமாத்தில் திணிக்கப்பட்ட இவர்களின் உயிருக்கு இலங்கையில் எந்த உத்தரவாதமும் இல்லை.