குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பொய்யே வாழ்க்கையாகக் கொண்ட ஹிட்லரின் பிரச்சாரகரான கோயபல்ஸூடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி விமர்சித்திருப்பதை பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்து தத்துவாவை முன்னிறுத்தும் காங்கிரசிற்கும் இந்து தத்துவா அடிப்படை வாதிகளான பாரதீய ஜனதாவிற்கும் இடையே நடைபெறும் குத்துவெட்டுக்கள் கோயபல்ஸ் காலத்தை விஞ்சுகிறது.
மும்பையில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்களைப் பட்டியலிட்டு மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, நரேந்திர மோடி ஒரு கோயபல்ஸ் மாதிரி பொய்யை சொல்லுகிறார் என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக மேலிடம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.