Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோடநாடு மேல் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்!

ஜெயலலிதாவின் ஓய்வு பங்களாவான கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை கொலை தொடர்பான விசாரணை திவீரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சில அமைச்சர்களும் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்படுவார்கள் என தெரிகிறது.

இதுவரை நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில்  இந்த வழக்கோடு தொடர்புடைய அனுபவ் ரவி உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில் கோடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு சுப்ரீம்கோர்ட் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேல்விசாரணை நடத்தப்படுவதாகவும் மேல்விசாரணை நடத்திக்கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவில்லாமல் தான் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் வாதத்தை கேட்ட நீதிபதிகள் மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்றும் கோடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் இருக்கிறது என கூறிய நீதிபதிகள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் கோடநாடு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என கூறி அனுபப் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version