வருகிற மூன்றாம் தியதி கொழும்பில் நடைபெறும்
iifa அமைப்பின் இந்தியத் திரைப்பட விழா இந்திய திரையுலகினருக்கு தொழில் ரீதியான பல தர்மசங்கடங்களை எதிர் நோக்கியுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் இந்த விழாவுக்குச் செல்பவர்களின் படங்களை புறக்கணிப்போம் என்ற அறிவிப்பை வெளியிட்ட பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரையுலகைச் சார்ந்தவர்கல் இவ்விழாவை புறக்கணிப்பார்கள் என்று தெரிகிறது. மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜுனா, புனித் ராஜ்குமார் ஆகியோரும் இலங்கை விழாவை புறக்கணித்து விட்டதாக ஊர்ஜிதம் ஆகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலு இலங்கைத் தூதரகம் நடிகர்களை வலை வீசி விழாவுக்குப் பிடிக்கும் வேலையில் மும்மூரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில் நம்மிடம் உருவாகியிருக்கும் ஒரு கேள்வி தமிழர்கள் அல்லாத இந்த நடிகர்கள் எல்லாம் இனக்கொலை அரசின் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதான். ஆனால் தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தமிழர்கள் என்று குறிக் கொள்ளும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் இனக்கொலை குற்றவாளி ராஜபட்சேவிடமே மீள் கட்டுமானம் என்ற பெயரில் நட்பு கொள்கிறாரே? இது மட்டும் நியாயமா? தமிழன் என்றால் தூரோகம் செய்யலாம்? தமிழர் அல்லாதவர்கள் துரோகம் செய்யக் கூடாதா?