Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொரோனா அதிக மருத்துவர்களை பலி கொடுத்த தமிழகம்!

இந்தியாவிலேயே கொரோனா பலி எண்ணிக்கையிலும் தமிழகம் முதல் மூன்று இடங்களில் இருக்கும் நிலையில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவுக்கு தமிழகத்தில்தான் மருத்துவர்கள் பலியாகி உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டார்கள். இந்தியாவிலேயே மருத்துவக் கட்டமைப்பில் முன்னேறிய மாநிலமாக உள்ள தமிழகத்தில் 12,000 ர்கும் அதிகமான மக்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகி உள்ளார்கள்.

கொரோனா ஒழிப்பில் முன்களப்பணியாளர்களாக இருந்த மருத்துவர்கள் சந்தித்த நெருக்கடி மோசமான ஒன்றாக இருந்தது. துவக்கத்தில் போதுமான உபகரணங்கள் இல்லை. ஒழுங்கு படுத்தப்படாத வேலை நேரம் என அவர்கள் பல சங்கடங்களை சந்திக்க நேரிட்டது. விடுப்பே இல்லாமல் மாதக் கணக்கில் பணி செய்ததால் சில மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது. அதன் விளைவாகவே பல செவிலியர்கள், மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியாகவும் நேர்ந்தது.

ஆனால், கொரோனா காலத்தில் பணியில் இருக்கும் போதே இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியா முழுக்க 2020-ஆம் ஆண்டு கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 500 –க்கும் மேல் என்கிறது இந்திய மருத்துவ சங்கத்தின் தரவுகள்.

இந்த எண்ணிக்கை இந்தியா முழுமைக்குமாக உள்ள தகவல்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியாகியிருக்கிறார்கள். மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் இதற்கு அடுத்த இடங்களில் வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலமே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. ஆனால், அதிக மருத்துவர்களை இழந்த முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது.

Exit mobile version