Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓய்வு பங்களாவான கொடநாடு தேயிலை தோட்ட பங்களாவில் அவரது மரணத்தின் பின்னர் நடந்த கொலை கொள்ளை வழக்குகள் மீண்டும் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை மீண்டும் விசாரணைக்குட்படுத்தியது தமிழக அரசு. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொள்ளை சம்பத்திற்கு தொடர்புள்ளது என குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்ததால் மீண்டும் வழக்கு சூடு பிடித்த நிலையில்  இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்தத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, அந்த வழக்கில் சாட்சிகளில் ஒருவரான அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் இதே வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து விட்ட நிலையில் மீண்டும் இதில் விசாரணை நடத்துவது உள்நோக்கம்  கொண்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். அரசுத் தரப்போ இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் விசாரணை அவசியம் என வாதிட்டனர்.

பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி ஒரு குற்ற வழக்கின் எந்தக் கட்டத்திலும் கூடுதல் விசாரணையை நடத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. மெலும் இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பவர் இந்த  வழக்கின் வாதியோ, பிரதிவாதியோ அல்ல அவர் வெறும் சாட்சிதான்” என்று அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

இப்போது இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version