Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கேரள மழை வெள்ளச் சேதம் 24 பேர் பலி காணாமல் போனோரை தேடும் பணி திவீரம்!

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்   கேரள மாநிலத்தில் மீண்டும் மிகப்பெரிய வெள்ள சேதங்களை உருவாக்கியுள்ளது. கோட்டயம் , இடுக்கி மாவட்டங்களில் வீடுகள் இடிந்தமையாலும், நிலச்சரிவு காரணமாகவும் பலர் இறந்துள்ள நிலையில் காணாமல் போயுள்ள மக்களையும் தேடும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலமாக கேரளம் உள்ளதால் எப்போதும் பெரும் வெள்ள சேதங்களை அடிக்கடி சந்தித்து வருகிறது கேரள மாநிலம். கடந்த சில நாட்களாகவே கன மழையை எதிர்கொண்டு வரும் கேரள மாநிலத்தின்  கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிகால் என்ற இடத்தில் ஏராளமான வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளார்கள் அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்தான் அதிக அளவு சேதம் உருவாகி உள்ளது.இங்குள்ள சில வீடுகள் வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டுள்ளன கடுமையான மண் சரிவும் ஏற்பட்டுள்ளதால் 24 பேர் வரை இறந்து அவர்கள் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காணாமல் போயுள்ளதால் அவர்களை மீட்கும் பணி திவீரப்படுத்தப்பட்டுள்ளது.

2019- வரலாறு காணாத மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து துணிச்சலாக மீண்டெழுந்த கேரள மாநிலம் மீண்டும் ஒரு கடினமான  சூழலை எதிர்கொள்கிறது.

Exit mobile version