“கூடங்குளம் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கமோ, சுனாமியோ ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்த மறு கணமே பரமக்குடி தலித்துக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய ஜெயலலிதா அரசை ஆதரித்து புலம்பெயர் குறுந்தேசிய அரசியல் வாதிகள் போராடும் தமிழக மக்களின் எதிர்ப்பைத் தேடிக்கொண்டனர். தமிழகத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் நண்பர்களை எதிரிகளாக்கும் இவர்களின் செயற்பாடுகள் இன்று கூடங்களத்தில் போராடும் நட்பு சக்திகளையும் எதிரிகளாக்கும் நிலை தோன்றியுள்ளது.
அணு மின் உற்பத்தியால் உருவாக வல்ல அழிவுகள் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில் பன்நாட்டு நிறுவனங்களின் அடியாட்களாகத் தொழிற்படும் இந்திய அரசியல் வாதிகள் இந்திய தேசிய நலனுக்கு எதிராக அணு மின் நிலையத்தை ஆதரிக்கின்றனர். கூடங்குழத்தில் போராடும் மக்கள் தமது நலன் சார்ந்த அரசியல் போராட்டமாக அதனை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.