அணு மின் உற்பத்தி உலகம் முழுவது அழிவுகளை ஏற்படுத்திவரும் நிலையில் அதற்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடிவருகின்றனர். உலகம் முழுவதும் உருவாகிவரும் அழுத்தங்கள் காரணமாக பல நாடுகளில் அணு மின் உற்பத்தி கைவிடப்பட்டது. மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களை கருத்தில் கொள்ளாமால் தமிழ் நாட்டு மாநில அரசும் மத்திய அரசும் அணு மின்நிலையத்தை தொடங்கி தம்மை நவ பாசிச அரசுகளாக அறிவித்துள்ளன.
கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்திருந்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
உற்பத்தியை தொடங்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பொறியாளர் சுந்தர்ராஜன், மீனவர்கள் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் பீட்டர் ராயன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படாதவரை, கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், அணுஉலை தொடர்பாக தமிழக அரசு போதுமான ஏற்பாடுகளை செய்துள்ளது என்று தீர்ப்பளித்தனர்.