இந்த போராட்டத்தை கடற்படை ரோந்து விமானம் கண்காணித்தபடி இருந்தது. போராட்டத்தில் பங்கேற்ற இடிந்தகரை கீழத்தெருவைச் சேர்ந்த சகாயம் (வயது 42) கொல்லப்பட்டார். தாழப்பறந்த சிறிய ரக போர் விமானங்கள் மக்களைத் தாக்க முற்பட்டன. இதனால் சகாயம் என்பவரது மண்டை உடைந்து மரணமானார். முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது உறவினர்கள் இதுபற்றி கூறும்போது, சகாயம் சாவுக்கு விமான பைலட்டே காரணம். அவர் போராட்டகாரர்களை கலவரப்படுத்தவே விமானத்தில் தாழ்வாக பறந்தார். எனவே அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சகாயம் இறந்த தகவலை இடிந்தகரையில் உள்ள போராட்ட அமைப்பு நிர்வாகிகளுக்கு தெரிவித்து விட்டோம். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் இருக்கும் சகாயத்தின் பிணத்தை வாங்க வேண்டாம் என்று கூறி விட்டனர். எனவே நாங்கள் பிணத்தை வாங்க மாட்டோம். அரசே அவரது உடலை வாங்கி பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சகாயம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
இனி, தமிழக மீனவர்களைத் தாக்கும் பணி சிங்கள இராணுவத்துக்கு இருக்காது. அணு உலைப் பாதுகாப்பு என்ற பெயரில் அந்தப் பணியை இந்தியக் கடலோரக் காவற்படையே எடுத்துக் கொள்ளும் என்பதையே சகாயத்தின் மரணம் காட்டுகிறது.