Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குலாம்நபி ஆசாத்துக்கான மோடியின் கண்ணீர் எத்தகையது?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதையொட்டி அவருக்கு பிரிவு உபசார நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடந்தது.அதில் குலாம் நபி ஆசாத்திற்காக பிரதமர் மோடி கண்கலங்கிய நிகழ்வு இந்திய ஊடகங்கள் முழுக்க பிரதிபலித்தது.

இந்தியா அறிந்த அரசியல் தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி ஆவார். இனி அவரால் காஷ்மீரில் இருந்து எம்.பி ஆக முடியாது. ,காரணம் காஷ்மீருக்கு இருந்த மாநில அந்தஸ்தையே மோடி அழித்தொழித்து விட்டார். அது புதுச்சேரி போன்ற அதிகாரமற்ற யூனியன் பிரதேசம் போல ஆகி விட்டது. சட்டமன்றம் இனி காஷ்மீருக்கு இல்லை என்பதால் இனி குலாம் நபி ஆசாத் மட்டுமல்ல எவர் ஒருவரும் எம்.பியாக ஆக முடியாத நிலையை பாஜக உருவாக்கியது.

குலாப் நபி ஆசாத் இனி காஷ்மீர் தவிர்த்து வேறு எங்கிருந்து எம்பியாக தெரிவாவார் என்பதும் தெரியாத நிலையில் இந்த பிரிவு உபசார விழாவில் மோடி குலாம் நபி ஆசாத்திற்காக வடித்த கண்ணீர் போலியானது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. அது பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் பாஜக தலைவர் வாஜ்பாய் வடித்த கண்ணீருகிக்கு இணையானது என்று சிலர் விமர்சித்திருந்த நிலையில்,

குலாப் நபி ஆசாத் குஜாரத்தில் இருந்து சிலர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்று பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொண்ட போது அவர்களை மீட்க உதவியதை மோடி நினைவுகூர்ந்து பேசி கண்ணீர் விட்டார். வேறு சிலரோ இந்த நிகழ்வோடு குஜராத்தில் 2002 முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களின் போது கலவரக்காரர்களிடம் சிக்கி கொண்ட ஒரு முஸ்லீம் எம்.எல்.ஏ தங்கள் உயிரைக் காப்பாற்றும் படி அப்போதைய குஜராத் முதல்வர் மோடிக்கு தொலைபேசிய போது அவர் அந்த தொலைபேசியை எடுக்காமல் விட்டதை நினைவு கூர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஈசான் ஜாப்ரியின் மனைவி

பிப்ரவரி 28, 2002 அன்று ஆய்தமேந்திய சங் பரிவார பயங்கரவாதிகள் தான் குடியிருந்த குல்பர்க் சொசைட்டியைச் சூழ்ந்த நிலையில், காங்கிரஸ் எம் பி ஈசான் ஜாப்ரி உதவி கேட்டு போன் செய்தபோது நீங்கள் அழைப்பை ஏற்கவே இல்லை என்று கூறிய அவரது மனைவி ஸாகியா ஜாப்ரி இன்றும் தன் குற்றச்சாட்டிலிருந்து பின் வாங்கவில்லை. விசாரணையின் போது ஜாப்ரி என்னை அழைக்கவே இல்லை என்று எழுத்து பூர்வமாக நீங்கள் பதிலளித்து விட்டீர்கள். 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் உங்கள் மீது குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றமும் கூறிவிட்டது. குஜராத் டூரிஸ்டுகளைப் பற்றி ஆசாத் அழுததை நினைவுகூர்ந்து நீங்கள் ‘நா தழுதழுக்க கண்ணீர் சிந்திய போது’ குல்பர்க் சொசைட்டியில் தஞ்சமடைந்த முஸ்லிம்களைக் காப்பற்றுங்கள் எனக் கதறிய ஈசான் ஜாப்ரியின் குரல்தான் எனக்குக் கேட்டது.” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version