Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குறூப்ஸ்காயா மறைவின் 70வது வருடம் :தமிழரசன்

புரட்சிவாதியும் லெனின்மனைவியுமான குறூப்ஸ்காயா ( (Nadeshda Konstantinowa Krubskaja)  ) வின் எழுபதாவது இறந்த தினம் இவ்வருடமாகும். அவர் போல்சவிக் கட்சித் தோழர்களால் நாட்யா( (Nadja) என்று பெருமதிப்போடும் தோழமையோடும் அழைக்கப்பட்டார். 1869 பெப்ரவரி 14 இல் பீட்டர்பேர்க்கில் சார் மன்னனின் இராணுவ அதிகாரி ஒருவரின் மகளாகப் பிறந்தார். இவரின்தாயார் ஓர் ஆசிரியை. குறூப்ஸ்காயா தன் கல்வியை முடித்துக் கொண்டு ஆசிரியையாகப் பணியாற்றிய சமயத்தில் மார்க்ஸ்சியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுத் தொழிற்சங்க இயக்கங்களில் பணியேற்றார். இவர் 1894 இல் லெனினைச் சந்திப்பதற்கு முன்பாகவே லெனின் மாக்ஸ்சியவாதி ஆவதற்கு முன்பாகவே புரட்சி இயக்கத்தில் செயற்படத் தொடங்கியிருந்தார். இருவரும் அரசியல் நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப் பட்டு சைபீரியாவில் கடூழியச் சிறைவாசம் அனுபவித்து பின் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். இவர் எழுதிய “உழைக்கும் பெண்கள”; என்ற நூல் 1901 ஆம் ஆண்டில்ஜேர்மனியின் முன்னிச் நகரில் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டது. இந்த நூல் அன்றய ஜேர்மனியின் சமூகஜனனாயகவாதியான ஓகஸ்ட் பேபெல் எழுதிய பெண்களும் சோஷலிசமும்” என்ற நூலுக்குச் சமமானது. நாடு கடத்தப்பட்டு வாழ்ந்தபோது றஸ்ய சமூகஜனனாயகக் கட்சிக்காகத் தொடங்கப் பட்ட ஸ்க்ரா பத்திரிகையின் முழுநிர்வாகத்தையும் முன்னிச் நகரிலிருந்து குறூப்ஸ்கயாவே நிர்வகித்து வந்தார். அத்துடன் அதே நகரில் இயங்கிய சமூகஜனனாயகக் கட்சியின்   அலுவலகத்திலும் இவரே முக்கியமாக வேலைசெய்து வந்தார். குறூப்ஸ்காயா றஸ்ய மொழியுடன் போலந்து ஆங்கிலம  ,பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகளையும் அறிந்தவராக இருந்தார். நீண்டகாலம் ஜேர்மனி பிரான்ஸ் சுவிற்சலாந்து போலந்து போன்ற நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து ஒக்டோபர் புரட்சிச் சமயத்தில் றஸ்யாவுக்குச் சென்றார்.
‘நான்மாபெரும் ஒக்டோபர் புரட்சியின் உலகுக்கான சாட்சியாக வாழ்கிறேன”  என்று புரட்சிக்காலம் பற்றி அவர் எழுதினார். கிளாரா செற்கின், அலெக்ஸ்சாண்டிறா கொலந்தாய் உட்படப் பல பல பெண்ணியவாதிகளிடம் நெருங்கிய அரசியல் உறவு கொண்டிருந்தார். “சுதந்திரக் காதல்” போன்ற தீவிரப் பெண்ணியக் கருத்தியல்களை அவர் ஒத்துக் கொள்ளவில்லை. இது திட்டமிட்டுக் கொண்டுவரக் கூடிய ஒன்றல்ல. சமூகத்தின் இயற்கையான வளர்ச்சிப் போக்கில் பாலியல், தனது கட்டுக்களை அறுக்கும் என்று அவர் கருதினார். 1917 முதல் கல்வித்துறைக் கொமிசாராகச் செயற்பட்டு எழுத்தறிவின்மையை ஒழிக்கவும் பெண்கள் மத்தியில் கல்வியை எடுத்துச் செல்லவும் செயற்பட்டார். போதனாவியல் சம்பந்தமாக மிகப்பெரிய 11 தொகுதி நூல்களை அவர் எழுதினார். 1924 இல் லெனின் இறந்தபோது அவர் உடலை லெனின் விருப்பப்படி அவரின் தாயாரின் உடலுக்கு அருகே புதைக்க வேண்டுமெனவும் லெனினுக்கு பெரும் நினைவுச் சின்னங்கள் அமைப்பதும் எல்லா இடங்களுக்கும் அவரின் பேரைச் சூட்டுவதின் பின்பான ஸ்டாலின் அரசியலைச் சந்தேகித்து அவர் இந்தத் தனிமனித வழிபாட்டின் நிலையைக் கடுமையாக எதிர்த்தார். ஸ்டாலினிச அதிகாரத்துவ இயக்கத்திற்கு எதிராக கட்சியின் மிகச் சிறந்த மார்க்ஸ்சிய சிந்தனையாளரான ரொட்ஸ்கி கட்சியில் போராடியபோது குறூப்ஸ்காய அவரைத் தீவிரமாக ஆதரித்தார். ரொட்ஸ்கிக்கும் லெனினுக்கும் இடையே ஏதோ பெரும்அரசியல் முரண்பாடுகள் இருந்ததாக ஸ்டாலின் கருத்துருவாக்கம் செய்தபோது குறூப்ஸ்கயா ரொட்ஸ்கியைப் பாதுகாத்தார்.
 
 
 
“1902இல் ரொட்ஸ்கி சைபீரியாவிலிருந்து முதன் முதலில் லண்டனில் லெனினைச் சந்தித்தபோது எத்தகைய மதிப்பையும் தத்துவம்சார்ந்த தனி இடத்தையும் ரொட்ஸ்கிக்கு லெனின் வழங்கினாரோ அதை அவர் தனது சாகும் காலம்வரை கொண்டிருந்தார்’ என்று குறூப்ஸ்காயா ரொட்ஸ்சிக்கு எழுதினார்.
லெனின் மரணமாகி ஒரு கிழமையின் பின்பு லெனினது விதவை மனைவியான குறூப்ஸ்கயாவிடமிருந்து ரொட்ஸ்கிக்கு ஒரு கடிதம் வந்தது.
அன்புள்ள லியொன் டாவிடோவிசு, லெனின் மரணமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உங்களுடைய புத்தகத்தை நான் எனது கணவரின் வேண்டுகோளின்பேரில் அவருக்கு வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் மாக்ஸ்சினதும் லெனினதும் குணாம்சங்களை ஒப்புநோக்கிக் கூறுமிடத்து, என்னைத் தொடர்ந்து வாசிப்பதை நிறுத்தும்படி சொல்லி, மீண்டும் மீண்டும் அவ்வரிகளை வாசிக்கும்படி கேட்டதோடு, அதைக் கவனமாகக் கிரகித்ததோடு, அந்த வரிகளைத் தானும் மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தார் என்பதை நான் உங்களுக்குச் சொல்வேன். இதனோடு சேர்த்து நான் இதையும் உங்களுக்குச் சொல்வேன். நீங்கள் சைபீரியாவிலிருந்து லண்டனுக்கு வந்தபொழுது விளாடிமீர் இலிச்சுக்கும் உங்களுக்கும் என்ன உறவு ஏற்பட்டதோ அந்த உணர்வானது அவர் சாகும் தறுவாயிலும் அவரிடமிருந்து அகலவில்லை.
லியொன் டாவிடோவிச், நீங்கள் ஆரோக்கியமாகவும் தைரியமாகவும் இருக்க வாழ்த்தி உங்களைக் கட்டி அணைக்கிறேன்.
N.குறூப்ஸ்கயா-
 
 
 
இறுதிக்காலத்தில் லெனினையும் குறூப்ஸ்காயாவையும் ஒன்றுசேர எதிர்த்துத் தனிமைப் படுத்தி வந்த ஸ்டாலின் லெனின் முன்பாகவே குறூப்ஸ்காயாவைக் கெட்ட சொற்களால் நிந்தனை செய்ததைப் பொறுக்காத லெனின் குறுப்ஸ்காயாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி தனக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதி எனவும் இதற்காக உடனடியாக ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும,  இல்லாவிட்டால் தனிப்பட்ட உறவுகள் உட்பட சகல ஸ்டாலினினுடனான உறவுகளைத் துண்டிக்கப் போவதாகவும் லெனின் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் வன்மமும் அதீத தனிமனிதப் பகையுணர்வும் கொண்ட ஸ்டாலின் லெனினிடமும் குறூப்ஸ்காயாவிடமும் மன்னிப்புக் கேட்கவோ தவறுக்கு வருந்தவோ தயாராக இருக்கவில்லை. 1922 இல் குறூப்ஸ்காயா அரசியல்குழு உறுப்பினரான கமனோவுக்கு எழுதிய கடிதத்தில் ‘தன்னுடைய தனிப்பட்டவாழ்வில் கூட ஸ்டாலின் தலையிடுவதாகவும் அவமானப்படுத்தியதாகவும் பயமுறுத்தியதாகவும்” தெரியப் படுத்தினார்.
  லெனின் குறூப்ஸ்காயா இவர்களின் ஏனைய கட்சித் தோழர்களோடான தொடர்புகள் பேசப்படும் விடயங்கள் போன்றவற்றை தனது உளவுத்துறைமூலம் ஸ்டாலின் வேவு பார்த்து வந்தார். சோவியத் புரட்சியின் தந்தையான லெனியையே வேவுபார்க்குமளவு ஸ்டாலினிசம் வளரத்தொடங்கிய சமயமாக அது இருந்தது. லெனின் இறப்பின் பின்பு குறூப்ஸ்காயா அவரது அரசியற்தொடர்புகளிலிருந்து துண்டித்துத் தனிமைப்படுத்தப்பட்டவுடன் ஸ்டாலினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயமுறுத்துப்பட்டார். ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் “வேறுரொரு பெண்ணை லெனினின் விதவையென்று தன்னால் ஆக்க முடியும்” என்று இகழ்ச்சியாக குறூப்ஸ்கயாவை ஸ்டாலின் அவமானப் படுத்தியதாக குருசேவ் தனது நினைவு நூலில் எழுதியுள்ளார். 1937 1938 1939 களில் லெனினால் கட்சிக்குக் கொண்டுவரப்பட்டுப் பயிற்றப்பட்ட புரட்சியின் மிகச் சிறந்த தலைவர்களான சினோவேவ், கமனேவ் ;> karl Radeck, Yuri Piatokov, Grigory Sokolnikov, Nikolai Bukhrin, Alexi Rykov. Christian Rakovsky, Nikolai Krestisky, kw;Wk; nrk;gilapd; n[duyhf ,Ue;j Mikhail Tukhachevsky  மற்றும் செம்படையின் ஜெனரலாக இருந்த  Mikhail Tukhachevskyஎன்பர்களை தனது கழையெடுப்பின்போதும் பொய்வழக்கின்போதும் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கிச் சித்திரவதை செய்து கொன்றொழித்தார்.   லெனினது மத்திய குழு அங்கத்தவர்களுள் லெனினும் ஸ்டாலினும் கலினின் மாத்திரமே இயற்கை மரணம் எய்தியவர்களாகும். ஓன்றரை மில்லியன் போல்சவிக்குகளை ஸ்டாலினிஸ்டுகள் கொன்று குவித்தனர் என்பது இன்று ஆவணமாக்கப்பட்டுள்ளது.
1931 மார்ச் 17 இல் ஸ்டாலின் குறூப்ஸ்கயாவை மத்தியகுழுவிலிருந்து விலக்கினார்.
 
 
 
1939 இல் மயாகோவ்ஸ்கியின் தற்கொலை நடந்தது. இதே வருடம் மாக்ஸ்சிம் கோர்க்கி இறந்தார். இச்சமயத்திலேயே குறூப்ஸ்காயா திடீரென மரணமடைந்தார். மார்க்சிம் கோர்க்கி மற்றும் ,குறூப்ஸ்காயா ஆகிய இருவரது மரணங்களும் ஸ்டாலினால் நஞ்சூட்டப்பட்டே நிகழந்ததென்று நம்புமளவு ஆதாரங்கள் இருந்தன. சோவியத் புரட்சியின் மிகச் சிறந்த கொடைகளில் ஒருவரான புரட்சியாளர் குறூப்ஸ்கயா 1939 பெப்ரவரி 27இல் இறந்தார். எதிகாலத்தில் உலகில் சோஷலிசப் புரட்சிகள் எழும் ஒவ்வொரு பொழுதிலும் லெனினைப் போல் ரொட்ஸ்கியைப்போல் குறூப்ஸ்காயாவையும் புரட்சியாளர்கள் புதுவார்ப்புச் செய்வார்கள். உலகப் புரட்சியின்கொடியோடு அவர்களின்  பெயர்களும் இணைக்கப்படும்.
தமிழரசன்
பேர்ளின்
02.03.2009

Exit mobile version