சீமானின் நாம் தமிழர் கட்சி குமரி மாவட்டத்தில் வளர்ந்து கொண்டிருப்பதை போன்ற ஒரு பிரமையை அவரது கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த தேர்தலில் அக்கட்சி பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பல தொகுதிகளில் பெற்றது உண்மை தானெனினும் தேர்தல் முடிந்த இந்த சில மாதங்களில் அந்த வாக்கு வங்கி இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கும் என்ற ஆரூடத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். அவர்களுடைய குதூகலத்துக்கு எந்த அடிப்படையும் இல்லை
. முதலாவது நாதக குமரி மாவட்டத்தில் மட்டும் வேகமாக வளர்கிறது என்று நம்புவதற்கு எந்த தனிச்சிறப்பான காரணமும் இல்லை. குமரி மாவட்டம் குறித்த நாதகவின் நம்பிக்கை என்ன? சீமான் சாதியை சேர்ந்த மக்கள் குமரியில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதே அது. சீமான் மேடையில் மலைகள் வெட்டுவதை எதிர்ப்பது போலவும், இயற்கை வளத்தை பாதுகாக்க வந்தவர் போல காட்டிக் கொண்டாலும் கட்சித் தொண்டர்களிடம் மறைமுகமாக சாதியுணர்வை தான் வளர்க்கிறார். நாதகவினர் சீமான் சாதியை சேர்ந்த ஆட்களிடம் கட்சியை வளர்ப்பதை ஒரு அக நெருக்கடியாக எடுத்துக் கொண்டு முட்டி மோதுகிறார்கள். அவ்வளவு அக்கப்போரை நாதக கும்பல் நடத்துவதற்கு அது தான் காரணம்.சீமானை ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது உண்மை தான். ஆனால் அந்த இளவயதிலேயே சாதிப் பித்தை தலைக்கேற்றி திமிராக பேசுவதை அதே சாதியை சேர்ந்த படித்த வர்க்கத்தினர் அசூயையுடன் பேசுவதை பார்த்திருக்கிறேன்.
சீமானின் இன்றைய குமரி வருகையை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. சீமான் நடுக்கத்துடன் தான் உள்ளே நுழைந்துள்ளார் என்பதற்கு பல மாவட்டங்களிலிருந்து அங்கு குவிந்துள்ள நாதக நபர்களே சாட்சி. ஒரு உள்ளாட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு ஏன் மாநில அளவில் ஆட்களைத் திரட்ட வேண்டும்? உள்ளூர அச்சம் இல்லாமல் வேறென்ன காரணம் இருக்க முடியும். சீமானை காங்கிரஸ் மட்டுமல்ல குமரி மாவட்டத்தின் படித்த வர்க்கமே வெறுக்கிறது. சீமான் வளர்ப்பது ஒரு கழிசடை அரசியல் கலாச்சாரம் என்ற பார்வை தான் அவர்களிடம் மிகுந்துள்ளது. சீமான் ஒரு நம்பகமற்ற நபர் என்பதும் பொதுவில் மக்கள் கருத்தாக இருக்கிறது. பிஜெபிக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை கழித்துப் பார்த்தால் குமரி மாவட்ட மக்களிடம் இந்திய சமூக அரசியல் ஞானம் ஒன்று மிகுந்திருப்பதைக் காணலாம். இது குமரி மக்கள் படித்தவர்கள்; சிந்திப்பவர்கள் என்ற புளகாங்கித உணர்வில் சொல்வதல்ல. அந்த அரசியல் ஞானம் ஒரு வரலாற்று நிர்ப்பந்தம். பாஜகவை எதிர்கொள்ள அரசியல் தொடர்பாக சிலவற்றை தெரிந்து கொள்வது அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. நீங்கள் இசுலாமிய இளைஞர்களை எடுத்துக் கொள்ளுங்கள். சிறப்பாக அரசியல் பேசுவார்கள்.
அவர்கள் பிஜெபியை புரிந்து கொள்ள அரசியலை கற்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு சாசரி இந்துவை விடவும் அரசியல் சமூக ஞானத்தில் முஸ்லிம்கள் கூருணர்வுடன் இருப்பதை பார்க்க முடியும். அது தான் குமரி மாவட்டத்தில் உள்ள பாஜக எதிர்ப்பு வாக்காளர்களிடம் இருக்கின்ற அரசியல் புரிதலின் அடிப்படை. அதை சீமான் போன்ற அரசியல் நம்பகமற்ற நபர்களால் தகர்க்க முடியாது. குமரி மாவட்டத்தின் மலை வளங்கள் அதானிக்காக வேட்டையாட ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் முன்னாள் ஒன்றிய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் பொன்னார். தனது பதவிக் காலத்தில் மலை வளங்கள் கடத்தப்படும் பாதை முழுவதும் கேமரா வைக்கப்படாமல் பார்த்துக் கொண்டார். களியக்காவிளை செக்போஸ்ட்டில் சிறப்பு காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்டது, எம்–சேண்ட் கடத்தல் மாஃபியாவுக்கும் போலீசுக்கும் இடையே நடந்த மோதலின் விளைவு என்று குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தன. ஆனால் பொன்னார் அதை கிறிஸ்தவ காவல் ஆய்வாளரை கொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகள் என்று திசை திருப்பி விட்டார். ஆனால் அதானிக்கு சேவை செய்யவே அமர்த்தப்பட்ட பொன்னாரை சீமான் ஒரு வாய் கூட விமர்சிக்கவில்லை என்பது எவ்வளவு அயோக்கியத்தனம்! மாறாக அவரது விமர்சனம் முழுவதும் திருட்டுத் திராவிடம் என்று அழைப்பதிலே இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மலைகள் அறுக்கப்படுவது வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது; ஆனால் ஏற்றுமதி தடுக்கப்படவில்லை என்பது உண்மை தான். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் சிதைக்கப்படுவதற்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிகிறது. இது ஒரு சட்டப்பூர்வ கடத்தல் என்ற வகையில் இதை தடுப்பதற்கான போராட்டங்கள் அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டியது. ஆனால் நாதக இதில் மற்றவர்களை இணைத்துக் கொள்ள மறுப்பது பின்னர் பேரம் பேசுவதற்கு தான் பயன்படும். இன்றைய சீமான், காளியம்மாள், சாட்டை துரைமுருகன் ஆகியோரின் பேச்சுகள் வெறுப்பின் உச்சம். ராஜீவ் காந்தியை கொன்றது நாங்க தான் என்று மறுபடியும் அந்த கொலைக்கு தகாத முறையில் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான் சாட்டை துரைமுருகன். மேலும் அதை நினைவுப்படுத்தி காங்கிரசின் தலைவர்களை மிரட்டவும் செய்தான். சீமானின் உரை பச்சை மட்டை வைத்தியம் பேசியது. மழை எப்படி பெய்கிறது; மகரந்தத் துகள்கள் எப்படி பூக்களுக்கு இடையே பரிமாறப்படுகின்றன என்று ஒரு ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மாணவனின் அறிவை பிரதாபித்துக் கொண்டிருந்தார், சீமான். அப்புறம் புத்தர், காந்தி, ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் மேற்கோள்கள், பழம்பெருமை பேசுதல், ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் புத்தகத்தின் மேற்கோள்கள் (வாழ்க்கையில இந்த ஒரு புக்கை தான் முழுசா படிச்சு இருக்கான் போல), புரட்சிகர வாய்ச் சவடால்கள் என்று ஒரு கொத்துப் புரோட்டாவை சிறந்த புரோட்டா, பீஃப் கறிக்கு பெயர் பெற்ற ஊரில் விற்றுக் கொண்டிருந்தார். தாம் காயடிக்கப்படுவதை உணராத ஒரு தற்குறிக் கூட்டம் விசிலடித்து கொண்டிருந்தது. பிஜெபியை வளர விட்டதன் அபத்தத்தை உணர்ந்தவர்கள் குமரி மக்கள். அது ஆறாத வடுவாக திரும்ப திரும்ப குமரி மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
இன்று அதே போன்ற ஒரு வெறிநாய் கும்பல் இரை தேடி எச்சிலை ஒழுக்குகிறது. நாதக சார்பில் ஒரு முறை போட்டியிட்டவர்கள் மறுமுறை போட்டியிட அக்கட்சியில் இருப்பதே இல்லை. அது போல ஒரு முறை வாக்களித்தவர்கள் மறுமுறை வாக்களிப்பார்கள் என்று நம்ப இடமில்லை. கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் நாதகவின் உச்சமாக இருக்கலாம். இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளோ அல்லது அதற்கு அடுத்த தேர்தலின் முடிவோ சீமானுக்கு தனது பாதையின் வரம்பை உணர்த்தக் கூடும். அந்த சலிப்பு தட்ட தட்ட இன்னும் அதிகமான பற்றத்துக்கும், மன வியாகூலங்களுக்கும் சீமான் ஆளாக நேரிடும். அதை ஒரு மக்கள் நல அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.