Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குன்னூர் விமான விபத்து இறுதி நிமிடங்கள் அறிக்கை தாக்கல்!

இதனையடுத்து குன்னூர் அருகே காட்டுப்பகுதியில் சிலர் தீப்பிடித்து எரிவதை பார்த்து அங்கு சென்றபோது அங்கு ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி தீப்பிடித்து எரிவதை பார்த்தனர்.

மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு படையை விரைவாக அந்த இடத்துக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்றது. மீட்கப்பட்டவர்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாக குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் உயிர் காக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், பிபின் ராவத்தின் ராணுவ ஆலோசகர் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர், கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பி.எஸ்.சவுகான், ஸ்குவாட்ரன் லீடர் குல்தீப் சிங், வாரண்ட் ஆபிசர் ரானா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் ஆஃபிசர் அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பல் ராய், நாயக் குருஸ்வாக் தேஜா, நாயக் ஜிதேந்திரா குமார், லேன்ஸ் நாயக் விவேக் குமார், லேன்ஸ் நாயக் சாய் தேஜா ஆகிய 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானப்படைத் தளபதி சவுத்ரி நேற்றிரவு சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரிக்க இந்திய விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த விசாராணை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங், ஏர் ஆபிசர் கமாண்டிங் இன் சீப் ஆகியோர் தலைமையில் இது நடக்கும்.

உயிரிழந்த முப்படைகளின் தலைவரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Exit mobile version