Findus என்ற இலச்சனையைக் கொண்ட உறை உணவு வகைகளில் குதிரை இறைச்சி கலந்திருப்பதாகத் தெரியவந்ததை தொடர்ந்து பிரித்தானியா முழுவதும் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
Findus இற்கு உறை உணவு தயாரிக்கும் பிரஞ்சு நிறுவனமான comigel கொமிஜெல் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் குதிரை இறைச்சி கலந்ததிருந்ததை ஏற்றுக்கொண்டுள்ளது.
டெஸ்கோவைத் தொடர்ந்து அல்டி -Aldi- என்ற பல்தேசிய அங்காடியும் தனது உணவு வகைகளில் குதிரை இறைச்சி கலந்திருப்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த இரு அங்காடிகளும் குறித்த உணவு வகைகளில் 30 வீதத்திலிருந்து 100 வீதம் வரை குதிரை இறைச்சி கலந்திருப்பதை பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளன.
பிரித்தானியாவைத் தலைமையகமாகக்கொண்ட டெஸ்கோ நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் அங்காடிகள் உள்ளன. உலகின் மூன்றாவது பெரிய சில்லரை வணிக வியாபார நிறுவனமான டெஸ்கோவின் உற்பத்திகள் பல மூன்றாம் உலக நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
டெஸ்கோவின் சொந்தத் தயாரிப்பான ஸ்பெகெதி போலோனியஸ் என்ற உணவுப் பண்டத்தில் 60 வீதம் குதிரை இறைச்சி கலந்திருப்பதாக இறுதியாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் உணவு தரப்படுத்தும் அரச நிறுவனம் கோழி மற்றும் பன்றி இறைச்சிக்கள் குறித்த புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றையும் சோதனை செய்யப்படுவதாகவும் இன்று அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் 80 வீதமானவர்கள் தமது நாளாந்த உணவுத் தேவைக்கு டெஸ்கோவில் கொள்வனவு செய்கின்றனர். சொந்த நாட்டு மக்களையே சுரண்டிக் கொழுக்கும் இந்த சில்லரை வணிக நிறுவனனங்கள் மூன்றாம் உலக நாடுகளிலும் தமது கிளைகளைப் பரப்பியுள்ளன. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகளை நிபந்தனையின்றி அனுமதிக்கும் இந்திய இலங்கை அரசுகள் தமது மக்கள் குறித்துத் துயரடைவதில்லை.
அன்னிய மோகம் கொண்ட சமுதாயத்தை உருவாக்கியுள்ள ஊடகங்கள் உட்பட அனைத்து அதிகாரவர்க்கதின் கூறுகளும் டெஸ்கோ போன்ற பல்தேசிய சில்லைரை வணிக அங்காடிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன.
குறைந்த பட்ச அரச கட்டுப்பாடுகள் கூட பல்தேசிய நிறுவனங்கள் சார்பாகத் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நச்சு உணவுப் பொருட்களை வறிய நாட்டு மக்கள் மீது இந்த நிறுவனங்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யும்.
கொக்கெயின் என்ற போதைப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகக் கருதப்படும் கொக்கோகோலா பானம் உலகின்
கொக்கொகோலா தனது தயாரிப்பு இரகசியங்களை வெளியிட மறுக்கின்றது. உலகின் எந்த நாட்டு அரசும் அதனைக் கேட்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. கோலாவின் இரகசிய சூத்திரத்தைத் தயாரிப்பவர்கள் ஸ்டீபன் கெமிக்கல்ஸ் என்ற இரசாயன நிறுவனம்.
கொக்கோ கோலா ஆழ் மன அடிமைத்தனத்தை ஏற்படுத்தும் போதை கலந்த பானம் என பல நிறுவனங்களும் மனித உரிமையாளர்களும் எச்சரித்த போதும் உலகின் சமூக விரோத அரசுகள் எந்த கவனமும் கொள்ளவில்லை.
லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் பணச் செலவின் ஒரு பகுதியை கொக்கொகோலா வழங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் தடையற்ற விளம்பரங்கள் விளையாட்டுப் போட்டிகளின் மையமாகத் திகழ்ந்தது. அரங்கத்தினுள் வேறு குடிபானங்கள் கொண்டு செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. அரங்கின் உள்ளே கோக்கொகோலா மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.
அமரிக்காவின் ரொட்டிக் கடையான மக்டொனாலில் விற்பனை செய்யப்படும் உணவுப்பண்டங்களில் உடல் நலத்திற்குத் தீங்கான இரசாயனக் கலவைகள் கலந்திருப்பதாக பலர் எதிர்ப்புத் தெரிவித்த போதும், இன்று உலகின் ஒவ்வொரு சந்தியிலும் மக்டொனால்ட் கோரமாக நிமிர்ந்து நிற்கிறது.
அப்பாவி மக்களின் உடல் நலத்தையே தனது பணப்பசிக்கு தீனியாகக் கேட்கும் பல்தேசிய நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வும் அதே வேளை போராட்டங்களும் இன்று அவசரத் தேவை.
-NN