Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்!

இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை 2019-ஆம் ஆண்டு மோடி அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை, போன்ர நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். ஆனால், இச்சட்டத்தில் இந்துக்களாகவே இருந்தாலும் ஈழத் தமிழர்களை சட்ட விரோத குடியேறிகள் என்றுதான் வரையறுக்கிறது. இச்சட்டத்தை துவக்கம் முதலே திமுக எதிர்த்து வந்தது அதிமுக இந்த  மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்த போது அதை ஆதரித்து வாக்களித்தது அதிமுக. இந்நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார்.  “இச்சட்டம் இந்தியாவின் மதச்சார்பின்மையை மட்டுமல்லாது மனித உரிமைகளையும் மீறுகிறது. ஆனால், இச்சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கிறார்கள்.மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை. இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது. நாட்டுக்கு அகதிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த தனிதீர்மானத்தை கொண்டுவந்துள்ளேன்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

இந்த மசோதாவை எதிர்த்து அதாவது பாஜக கொண்டு வந்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக-அதிமுக வெளிநடப்பு செய்தது. இது பற்றி கிண்டலாகக் குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன். “அவையில் அதிமுக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாஜக தீர்மானிக்கிறது”- என்று குறிப்பிட்டார்.

Exit mobile version