இடம்: கொழும்பு 06, வெள்ளவத்தை. (கொமர்ஷியல் வங்கிக்கு அருகில்)
காலம்: பெப் 15, 2015. ஞாயிற்றுக்கிழமை, காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை
நிலத்தடி நீரை மாத்திரமே ‘குடிநீர்’ உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான நீராதாரமாக கொண்டுள்ள யாழ் குடாநாட்டின் நீர் வளத்தை மாசுபடாது பாதுகாப்பது அவசியமானது.
அதுபோல, எண்ணெய்கழிவுகளினால் மாசடைந்துள்ள நிலத்தடி நீரினை விரைவாக சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால், நிலத்தடி நீர் மாசடைதலின் வேகம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று சூழலியலாளர்களும், துறைசார் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், எமது நீராதாரத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து விரைவாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ என்கிற கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களையும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள வைப்பதுடன், மத்திய அரசாங்கம், வடக்கு மாகாண சபை, துறைசார் நிபுணர்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களை இந்தப் பிரச்சினையில் விரைவான நடவடிக்கைக்கு வலியுறுத்துவதே எமது இலக்கு.
இது எந்தவிதத்திலும் அரசியல் கட்சிகள் சார்பிலான கவனயீர்ப்பு நிகழ்வு அல்ல. நாடெங்கிலுமுள்ள இளைஞர்களினால் ஒன்றிணைக்கப்பட்டு இனம், மதம், மொழி கடந்து முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வாகும்.
இன்று யாழ் குடாநாடு எதிர்நோக்கியுள்ள குடிநீருக்கான அச்சுறுத்தலை ஏற்கனவே கம்பஹா வெலிவேரிய மக்கள் எதிர்கொண்டிருந்தனர். எனவே, பிரதேசங்கள், மொழிகள் தாண்டி எமது மக்களின் குடிநீருக்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணையுமாறு அழைக்கின்றோம்.
-சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்
(மேலதிக தொடர்புகளுக்கு: – வதீஸ் வருணன் 0771910630)
குறிப்பு:
யாழ்ப்பாண நீரையும் நிலத்தையும் அழிக்கும் இந்த நடவடிக்கையை எம்.ரி.டி வோக்கேஸ் என்ற பல்தேசிய வியாபார நிறுவனமே தலைமை வகிக்கிறது. நோர்தேன் பவர் என்ற அதன் உப நிறுவனமே யாழ்ப்பாணத்தில் பாரக் கழிவெண்ணையை மக்கள் குடியிருப்புக்களுக்குள் வெளியேற்றியது. இந்த ஆர்பாட்டத்தை நடத்தியவர்கள் எம்.ரி.டி வோக்கஸ் இன் கொழும்புத் தலைமையம் முன்பாக ஒழுங்கு செய்திருந்தால் ஆர்ப்பாட்டம் மேலும் அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும்.
தவிர, இந்த அழிப்பின் பின்னால் மேற்கு ஏகாதிபத்தியங்களின் பண உதவியில் உயிர்வாழும் தன்னார்வ நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் செயற்பாடுகளும் அடங்கியுள்ளன.
சுன்னாகம் பேரழிவு: நிர்ஜ் தேவாவின் புறமுதுகும், வடமாகாண சபைத் தீர்மானமும்
சுன்னாகம் மின் நிலையத்திலிருந்து அழிப்பு நடத்தும் நிறுவனம் மூடப்படவில்லை
சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்
சுன்னாகம் அனல் மின் நிலையத்தை மூடுமாறு போராட்டம்
குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது
கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை
யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை