Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிஷன்ஜீ கொலை : இந்திய அரசின் இன்னொரு போர்க்குற்றம்

கிரிமினல்கள் எப்படியெல்லாம் செயற்படுவார்கள்? அதுவும் பல்தேசிய பணவெறிக் கும்பல்கள் எப்படியெல்லாம் தொழிற்படும் என்பதற்கு ஆயிரம் பக்க ஆய்வுகள் தேவையற்றவை. சாரி சாரியாக மக்கள் கொல்லப்படுவார்கள். அவர்கள் தமது சொந்த நிலங்களைவிட்டு அகற்றப்படுவார்கள். வீடுகளை விட்டுத் துரத்தப்படுவார்கள்.

வன்னியிலும் கிழக்கிலும் சிங்களக் குடியேற்றங்களும் பல் தேசிய நிறுவனங்களும் இணைந்து நிகழ்த்தப்படுகின்றன. அமைதியாக வாழ்ந்த மக்கள் கூட்டம் தெருக்களில் அனாதைகளாக அலைகிறது.

மத்திய இந்தியாவில் பிரித்தானிய, அமரிக்க பல்தேசிய பணவெறிக் கொள்ளைக்காரர்களுக்கு வளம் மிக்க நிலத்தைத் தாரைவார்த்துக் கொடுப்பதற்காக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பழங்குடி மக்கள் தமது சொந்த மண்ணை விட்டு விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்டுக்கள் செயற்படுகின்றார்கள். பழங்குடி மக்களின் அவலங்களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்களோடு இணைந்து போராடுகிறார்கள்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி, மாவோயிஸ்டுக்களுடன் பேச்சு நடத்துவதற்காக “சமாதானத் தூதுவர்” ஒருவரை நியமித்தார். அவரோரு சமாதானம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் போதே மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜீ ஆயுதப்படைகளால் கோழைத்தனமாகச் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றய தினம் 24/11/2011 அன்று நடைபெற்ற இந்தக் கொலையை நிகழ்த்தியது இலங்கையில் வெள்ளைக் கொடிகளோடு சரணடைந்த விடுதலைப் புலிகளை கொலைசெய இலங்கை அரசிற்குத் துணைபோன இந்திய அரசு தான்.

கிஷன் ஜீ கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்திய அரசு தனது மண்ணில் பல் தேசிய நிறுவனங்கள் சார்பில் நடத்திய இன்னொரு போர்க்குற்றம்.
2010 ஜூலையில் ஆசாத் என்ற மாவோயிஸ்ட் தலைவரும் இதே போலவே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்திய உள்துறை அமச்சின் சமாதான தூதுவரோரு பேசிக்கொண்டிருக்கும் வேளையிலேயே ஆசாத் என்ற மாவோயிஸ்ட் தலைவரும் கொல்லப்பட்டார்.

தெற்காசியாவை அழித்து அதன் வளங்களைச் சூறையாடும் பல் தேசிய நிறுவங்கள், இந்தியப் பெரு முதலாளிகள் போராடும் மக்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் இந்த மக்கள் கூட்டம் பெரும்பான்மையானது மட்டுமல்ல, பலமானதும் கூட. இதில் ஒடுக்கப்படுகின்ற இலங்கை தமிழ்ப் பேசும் மக்கள் யார்பக்கம் என்பதைத் தீர்மானிப்பதற்கு கிஷ்ன் ஜீ இன் படுகொலை சிறந்த உதாரணம்.

தொடர்புடைய பதிவுகள் : குருதியுறையும் தண்டகாரண்யா: பொன்னிலா

Exit mobile version