Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்குத் திமோரில் பெண்கள் அரசியலிற் பங்குபற்றுதலும், தீர்மானங்கள் எடுப்பதில் ஈடுபடுதலும்:மற் குரூக்

கிழக்குத் திமோரிலுள்ள பல பெண்களைப் போன்று 34 வயது நிரம்பிய மறிக்குயிற்றா சொறேஸ் கிழக்குத் திமோரின் விடுதலைக்கான புரட்சிகர முன்னணியில் சேர்ந்தார். கி.திமோர் 1975 தொடக்கம் 1999 வரை இந்தோனேஷியாவின் ஆக்கிரமிப்புக் கெதிராக 2 வருடங்கள் போராடிவந்தது.

இன்று, விடுதலைக்காக நடைபெற்ற போராட்டத்திற் பங்குபற்றியதற்காக மட்டுமன்றி கிழக்குத் திமோருக்குச் சுதந்திரம் பெற்றுக்கொள்வதற்குப் பெண்கள் அளித்த பங்ளிப்பு அவர்களை அரசியலிலும் தீர்மானங்களை எடுப்பதிலும் அதிகளவில் ஈடுபடுத்த முடிந்தது பற்றி அவர் பெருமையடைகிறார்.இந்த நிலை அவர்களை பாரம்பரிய அமைப்பு முறையிலிருந்து நீக்கி அதிகளவு தற்கால பன்முகத் தன்மை வாய்ந்த நிலையில் வைத்துள்ளது.

எமது கலாசாரம் அமைப்பின் அடிப்படையில் எமது பெண்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்ட நிலையில் அரசியலிற் பங்குபற்றும் ஆர்வம் அற்றவர்களாக இருந்தனர் என அவர் கூறினார்.

“”கிழக்குத் திமோரில் பெண்கள் அரசியலிற் பங்குபற்றுதலும், தீர்மானங்கள் எடுப்பதில் ஈடுபடுதலும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் முதலில் போத்துக்கல்லினாலும் பின்னர் இந்தோனேஷியாவினாலும் கிழக்குத் திமோர் ஆக்கிரமிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டது.இவ்வறிக்கை ஐக்கிய நாடுகள் பெண்களுக்கான அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையின் கீழ் வெளியிடப்பட்டது.

கிழக்குத் திமோர் சுதந்திரம் பெறுவதற்கு 2 வருடங்களுக்கு முன் 2000 ஆம் ஆண்டில் யூ.என்.ஐ.எவ்.ஈ.எம். தனது காரியாலயத்தைக் கிழக்குத் திமோரில் நிறுவியது. இது பெண்களுக்கான அதிகாரமும்,பாலியல் சமத்துவமும் ,அரசியலிற் பங்களிப்பும் ,தீர்மானங்களை எடுப்பதில் அதிகாரமும் பெற்றுக்கொள்வதற்கான பெண்கள் சம்பந்தமான நிகழ்ச்சித் திட்டங்களுக்குப் பொறிமுறை,நிதி உதவிகளை அளிப்பதற்கான நோக்கத்தைக் கொண்டது.

“”நான் உயர்தர பள்ளியில் படித்தபோது நான் அரசியலில் நாட்டம் கொண்டிருந்தேன்.பின்னர் எனது குடும்பத்தினருக்கு நடந்ததைப் பார்த்தேன். 1978 இல் நாங்கள் மலைப்பகுதிக்குச் சென்றோம். இந்தோனேஷியர்களால் எனது சகோரர்களுள் இருவர் கொல்லப்பட்டனர். எனது தந்தையார் சிறையிலடைக்கப்பட்டார்.நான் சுதந்திரத்திற்காப் பேராடிய பிறற்றிலினிற் சேர்ந்தேன்’ என்றார்.

இதனை ஒருநாள் பாராளுமன்றத்திற்குக் கொண்டுசெல்ல எண்ணியுள்ளேன். நான் இப்போது அரசியல் பற்றி அதிகளவு விடயங்களைக் கற்கிறேன். அடுத்த தேர்தலில் எனக்கு வாய்ப்புக் கிடைக்குமிடத்து நான் ஒரு பாராளுமன்ற அங்கத்தவராகவோ அல்லது அமைச்சராகவோ வருவேன் என்றும் அவர் கூறினார்.

14 அரசியற் கட்சிகளைச் சேர்ந்த 45 பெண் அரசியல்வாதிகளைக் கொண்டது. 2008 செப்ரெம்பரில் உருவாக்கப்பட்டதுமான எச்.எவ்.பி.ஏச்.டி.யூ.வில் அங்கம் வகிக்கும் ஒரு அரசியற் குழுவில் சொறேஸ் அங்கம் வகிக்கிறார்.

இந்த அரசியற் குழு பிறெற்றிலினைச் சேர்ந்ததாகும். யோசேபா கைபேற்றைத் தலைவராகக் கொண்ட இக்குழு யூனிபெம்மினால் ஆதரிக்கப்படுவதாகும்.

அவர் கூறுவதாவது; “”பெண்களது குழுக்களிடையே ஒற்றுமையில்லை. எனவே, பல்வேறு அரசியற் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கிடையே கூட்டுறவை உருவாக்க நாம் இந்த அமைப்பை உருவாக்கினோம்’.

“”தலைமைத்துவம், பொதுமேடைகளிற் பேசுதல் ஆகிய பயிற்சிகளிற் பங்குபற்றுதல் ஆகிய செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கிறோம். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் அங்கத்தவர்களோடு கலந்துரையாடல்களை நடத்தும் நிகழ்ச்சித்திட்டமும் எங்களிடம் உண்டு’ என்றும் அவர் கூறுகிறார்.

யூனிபெம் பாராளுமன்றப் பெண் அங்கத்தவர்களுக்கு மாற்றங்களை உருவாக்கும் நிலை பற்றிய பயிற்சி வழங்குவதற்கு ஆதரவளிக்கிறது. அதாவது, உள்ளீர்த்தல், யோசனை கேட்டல், பங்களிப்புச் செய்தல் ஆகிய இயல்புகளைக் கொண்ட தலைமைத்துவ பயிற்சியளித்தல் ஆகியன. இதனால், அவர்கள் தத்தமது தொகுதிகளில் பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உரிய முறையில் முகங்கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

46 வயதான கைபீற் சொல்வதாவது;

“”பெருமளவிலான கிழக்குத் திமோர் பெண்கள் ஏதோ ஒரு பெரிய கட்சியுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்’. இவர் சார்ந்த கட்சியைப் போன்ற ஏனைய கட்சிகளின் கடமை பெண்கள் அரசியலிற் தீர்மானம் எடுப்பதில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள உதவுதலாகும்.

அவர் கூறுவதாவது;

“”பெண்கள் தீர்மானம் எடுப்பதில் ஈடுபட வேண்டும். ஏனெனில், ஆண்கள் மாத்திரம் தலைமைவகிக்க முடியாது. பெண்களும் தலைமைத்துவ பதவியைப் பெற வேண்டும்’.

கைபீற் மேலும் கூறியதாவது;

“”அதிகரித்த தொகையுள்ள இளம் பெண்கள் தமது குடும்பத்தவரின் கட்சிக்கொள்கைகளை அனுசரித்து அரசியலில் அதிக நாட்டம் காட்டுகின்றனர். ஆணாதிக்கம் அதிகளவு நிலவும் தீமோர் சமூகத்தில் பெண்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்தும் நம்பிக்கையிழந்த தன்மையிலுள்ளனர்’.

கிழக்குத் திமோரை தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஏனைய நாடுகளிலிருந்து வேறுபடுத்தும் அம்சம் யாதெனில் அதனது தேசிய பாராளுமன்றத்தில் பெண்களின் விகிதம் 29.2% இது இந்தப் பிராந்தியத்திலே அதிகூடிய தொகையாகும்.

2000 ஆம் ஆண்டில் கிழக்குத் திமோரில் முதலாவது தேசிய பெண்களது காங்கிரஸ் பெண்களது வலைப்பின்னலான றீட் பெட்டோவை நிறுவியது. இது பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 30 வீதமான இடங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டது.

2006 டிசம்பரில் கொண்டுவரப்பட்ட கிழக்கு திமோருக்கான தேர்தல் சம்பந்தமான சட்டம் ஒரு கட்சிச் தேர்தலில் நிறுத்தும் ஒவ்வொரு நான்கு அபேட்சகர்களுள் குறைந்தது ஒருவராவது பெண்ணாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதன் பயனாக 65 அங்கத்தவர்களுள் 19 பேர் பெண்கள். பெண்கள் நீதி, நிதி, சமூக செயற்பாடுகள் ஆகிய அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளனர்.

பாராளுமன்றத்திற் பெண்களது நிலை உயர்வடைந்திருந்தாலும் தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவர் பெர்னாண்டோ, பேர்கஸ் “”இன்னும் உரத்ததாக அவர்கள் குரல் கேட்பதற்கு இன்னும் முன்னேற வேண்டியுள்ளது’.

அவர் கூறுவதாவது;

“”ஆண்டுதோறும் மக்களுக்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் உறுதிவாய்ந்த பாராளுமன்ற அங்கத்தவர்களை நாம் கொண்டிருக்கவில்லை. அந்த நாள் வரும்வரை பாராளுமன்றத்தில் பெண்கள் இருப்பர். ஆனால், பங்களிப்புச் செய்ய வல்ல பெண்கள் அல்ல’.

மக்களுக்குப் பாராளுமன்றத்தில் பெண்களும் உள்ளனர் என்று காட்டமுடியும். ஆனால், அவர்களுக்கு வேண்டியது என்ன என்பது பற்றி நாம் இன்னும் மக்களைத் திருப்திப்படுத்தவில்லை.

போர்கேஸ் கூறுவதாவது;

“அரசியலுக்குள் பெண்கள் ஈடுபட்டுச் செயற்பட இன்னும் காலம் வேண்டியுள்ளது. மேலும், ஜனநாயகச் செயற்பாடுகள் பற்றி விளங்கிக் கொள்ளவும் காலம் எடுக்கும்’.

“இவ்விடயங்கள் அனுபவம், நம்பிக்கை மூலமும் அறிந்துகொள்ள வேண்டியவை. எந்தவிதமான பொறுப்புகளையும் அறிந்து கொள்ளாத பெண்கள் பாராளுமன்றத்திற்கு வந்தால் தமது கொள்கைகளை அழுத்தியுரைப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கும்’.

இந்தச் சவாலை எதிர்கொள்ள ஜி.எம்.பி.ரி.எல். உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பெண்கள் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று. இதிலிருந்து எதிர்காலப் பெண் அங்கத்தவர்களும் கற்றுக்கொள்ள முடியும்.

சமூக,ஜனநாயகக் கட்சியின் தலைமை அங்கத்தவர்களுள் ஒருவரும் கிழக்கு தீமோர் பாராளுமன்றத்தின் உப தலைவருமான மாறிஆ பியாசோ ஜி.எம்.பி.ரி.எல். இன் தலைவராவார். 1975 இல் பிறெற்றிலில் சேர்ந்தபோது பியாசோ அரசியலில் ஈடுபட்டார்.

பாலியலிலும் பாராளுமன்றத்தில் பெண்களின் செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்களிலும் ஜி.எம்.பி.ரி.எல். தெளிவை உண்டாக்குகிறது. இவற்றுள் சட்ட ஆக்கத்தைப் பற்றி நுணுகி ஆராயும் திறமை நாட்டிற்கான பாதேடுகள், பாலியல் சமநிலை பற்றிய விடயங்கள் அடங்கும்.

“ஜி.எம்.பி.ரி.எல். இன் இரண்டாவது சந்ததி அக்டோபர் 2007 இல் உருவானது. இது பாராளுமன்றத்தில் பெண்களது பாலியல் சமநிலை அங்கீகாரம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான எல்லாவிதமான பாகுபாடுகளும் குறைக்கப்படுதல் என்பது பற்றிக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மூலம் உருவானது’ என்கிறார் பியாசோ.

அவர் கூறுவதாவது;

“இப்போது எமது பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு அதிகளவு பயிற்சி தேவைப்படுகிறது. ஏனெனில் அவர்களுள் அநேகர் வயல்களிலிருந்தும் குடும்பங்களிலிருந்தும் வந்துள்ளனர். அவர்கள் எமது நோக்கத்தை நிறைவு செய்யத்தக்கதாகப் பயிற்சி பெறவேண்டியுள்ளனர்’.

நாங்கள் பாலியல் சமநிலை பேணும் பாதேடுகள், குழுக்கள் அமைத்தல், எப்படித் தீர்மானங்களை எட்டுதல், சட்ட ஆக்கம் பற்றிய பயிற்சிகள் அளித்துள்ளோம். நாங்கள் பெண்கள். இவைகளை ஆரம்பிப்பது பற்றிய பயிற்சியும் கொடுக்க வேண்டியுள்ளது.

யூநிபெம் கிழக்குத் தீமோருடைய முதலாவது பாதேட்டின் மூலம் பெண் பாராளுமன்ற அங்கத்தவர்கள், அதிகாரிகள், பெண்கள் இயக்கங்கள் தேசிய பாதேடுகளைப் பாலியல் நோக்கில் ஆராயும் முன்மாதிரியை ஊக்குவித்தது. இது இலக்கை வறிய, தவிர்க்கப்பட்ட பெண்கள் மீது திசை திரும்பியது. இதனது தாக்கம் தேசிய, உள்ளூர் மட்டத்தில் உணரப்பட்டது.

இதனை ஆதரித்து பாராளுமன்றத்தினால் ஜி.ஆர்.சி. உருவாக்கப்பட்டது. இதனது பிரதான நோக்கம் பெண், ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண், பெண் சமத்துவத்தையும் சம உரிமையையும் பேணுவதாகும் என்கிறார் லுமெனா பிறெற்றாஸ்.

யூ.என்.டி.பி.யின் என்டா ஆகஸ்ரியானா கூறுவதாவது;

“சட்ட அமைப்பு பெண்களதும் ஆண்களதும் உரிமைகள் சமமானது எனக் கூறுகிறது. எனவே, சட்ட ஆக்கத்தில் நாம் பால் சமநிலையைப் பேண வேண்டியுள்ளது. இது ஜனநாயகப் பிரதிநிதித்துவத்திலும் பேணப்பட வேண்டியுள்ளது’.

இந்த மன்றம் பல விடயங்கள் பற்றி பாராளுமன்ற அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல்களை இலகுவாக்குகிறது. உதாரணமாக கருச்சிதைவு, குற்றவியல் சட்டம் ஆகியவை.

ஆகஸ்ரீனா மேலும் கூறுவதாவது;

நாங்கள் பெண், சில ஆண் பாராளுமன்ற அங்கத்தவர்களுடன் வைத்தியர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அது அவர்களுக்குப் பாராளுமன்றத்தில் விவாதிக்கமுன் கருச்சிதைவு போன்றவற்றின் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

சுதந்திரத்திற்குப் பின் கிழக்குத் திமோரில் பெண்களது பங்களிப்பு அதிகரித்து வந்தாலும் அது வளர இன்னும் இடமுண்டு.

பாராளுமன்ற அங்கத்தவர் பர்ணாந்து போர்கேஸ் கூறுவதாவது; “”விடயம் தொகையல்ல.செயற்பாடும்,பயன்தரும் நிலையுமே பயன்தருவதற்கு மக்களது வல்லமை வளரவேண்டும்.பெண்கள் பங்களிப்பு குறைவு, ஏனெனில் இந்தோனேஷியாவின் படையெடுப்பும் ,மற்றைய நாடுகளிலிருந்து எமது தொடர்பு தடுக்கப்பட்டமையும் நாம் என்றுமே ஜனநாயக ரீதியில் வாழாமையுமே ஆகும்.

ஐ.பி.எஸ்.

 

Exit mobile version